#Panache: விக்ரமிடம் பிடிக்காதது இது மட்டும் தான்! கமல் வெளிப்படை!!
  • 16:45PM Jul 04,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:45PM Jul 04,2019 Kodambakkam

தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருப்பது நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடிப்பில், உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களது “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்” தயாரிப்பில், “தூங்காவனம்” திரைப்பட இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாக்கி வரும் “கடாரம் கொண்டான்” திரைப்படம் தான். “ராட்சசன்” படத்தின் பின்னணி இசையின் மூலம் மேலும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் இசையமைப்பாளர் திரு.ஜிப்ரான் அவர்கள் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இந்தோனேசிய மாஃபியாக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து உருவாக்கிய திரைக்கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11.jpg

தமிழ் சினிமாவில் அடுத்த கமல் ஹாசன் என்று ரசிகர்களால் கூறப்படும் ஒரே நடிகர் நமது நமது சியான் விக்ரம் அவர்கள் தான். படத்தின் முக்கியமான காட்சிக்காகவும், கதாப்பாதிரத்திற்காகவும் எந்த அளவிற்கும் துணிந்து எதையும் செய்யும் தைரியம் கொண்டவர் உலக நாயகன். அதே அளவிற்கு கதாப்பாத்திரதிற்காக தன்னையே அற்பணிக்கவும் தயாராக இருப்பவர் நமது சியான் விக்ரம். இருவரும் இணையும் இந்த படம் அனேக தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கும் படமாக உருவெடுத்து வருகிறது.

12.jpg

இந்த படத்தின் ட்ரைலர் launch நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அப்போது உலக நாயகன் படத்தை பற்றியும் நடிகர் விக்ரம் பற்றியும் பேசுகையில் கூறியதவாது, ”தமிழ் சினிமாவில் பல கலைஞர்களை உருவாகும் எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம், எனது குருநாதர் தான் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் “இன்டர்நேஷனல்” என்ற வார்த்தையை சேர்த்தார். “ராஜ்கமல்” எனும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் பொழுது அக்ஷரா ஹாசன் பிறக்கவே இல்லை. அவரும் இந்த பேனரில் நடிப்பார் என்று கற்பனையும் செய்து பார்க்கவில்லை” நடிகர் விக்ரமின் வளர்ச்சியை “மீரா” திரைப்படத்தில் இருந்து பார்த்துக்கொண்டு வருகிறேன். அவர் திறமைக்கு கால தாமதமாக பிரபலமடைந்தது எனக்கு பிடிக்காத ஒன்று. இன்னும் வேகமாக அவர் சியான் விக்ரம் என்று பிரபலமடைந்திருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

13.jpg

மேலும் அவர் கூறுகையில் “நடிகர் விக்ரம் அவர்களின் நடிப்பிர்காகவே இந்த படத்தை பார்க்கலாம், ஹாலிவுட் தரத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல படத்தை நல்ல குழுவிடம் கொடுத்து தயாரித்த திருப்தியை பெற்றுள்ளேன். ஆங்கிலத்தில் “panache” என்று கூறுவார்கள் அந்த அளவிற்கு நேர்த்தியுடனும், ஸ்டைலாகவும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் நடிகர் விக்ரம்” என்றும் கூறியுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top