#BlackChicken: கடக்நாத் கருப்பு கோழி சாப்பிடலாமா? கூடாதா?
  • 08:19AM May 04,2019 Kadaknathwadi
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 08:19AM May 04,2019 Kadaknathwadi

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலான பேர்களுக்கு ஞாபகம் வரும் ஒன்று “இன்றைக்கு எந்த அசைவ உணவை ருசிக்கலாம்?” என்பது தான். அதிலும் சிக்கனுக்கு தான் அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர். காய்கறிகளில் இல்லாத omega 3 fatty acids சத்துக்கள் non veg உணவுகளில் அதிகம் இருப்பது போல non veg உணவில் இல்லாத அதிக சத்துக்கள் vegetarian உணவுகளிலும் இருக்கிறது. ஆதலால் veg and non veg இரண்டுமே சரிவர நாம் எடுத்துக்கொள்வது தான் நல்லது. சிக்கன் வகைகளில் பெருபாலும் இந்த broiler கோழியை தான் எல்லோரும் சாப்பிடுகின்றனர். நாட்டுக்கோழி என்ற பெயரில் நாம் வாங்குவது உண்மையில் நாட்டுக்கோழி அல்ல அது மருந்து கொடுத்து வளர்கப்படுகின்ற Farm chicken தான் என்கின்றனர் சிலர். இது இரண்டும் இல்லாமல் “கடக்நாத்” என்று ஒரு கோழி இருக்கிறது, அதை தமிழில் “கருப்புக் கோழி” என்கின்றனர். அந்த கோழி எங்கே கிடைக்கும், அதை சாப்பிட்டால் நமக்கு என்ன நன்மைகள் என்று பார்க்கலாம் வாங்க.

இந்த கடக்நாத் கோழி கருப்பு கலரில் இருக்கும் அதுனால நம் ஊர் மக்கள் இதை கருப்பு கோழி என்றே அழைக்கின்றனர். இந்த கோழி மத்தியபிரதேசத்தில் தான் வளர்க்கப்படுகிறது. ரொம்பவும் இயற்கையான முறையில் பழங்குடி மக்களால் வளர்க்கப்படுகிறது இந்த கருப்பு கோழி. காடுகளில் கூட இந்த கோழி வளருமாம். இந்த கோழி முட்டை இட்டதும் மத்த கோழிகள் மாதிரி அடைக்காப்பது கிடையாதாம். அதனால் அம்மக்கள் வேறு கோழியை வைத்து கருப்பு கோழியின் முட்டைய அடை காத்து வளர்கின்றனர். இந்த கருப்பு கோழி ரொம்பவும் இயற்கையான முறையில் வளர்க்கப்படுவதால் நம் உடலிற்கு அதிக நன்மைகளை தருகிறது இந்த கோழி.

இந்த கோழியை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி, ஆஸ்த்மா, கல்லீரல் பிரச்சனை ஆகியவை குணமடையுமாம். மைசூரில் இருக்கும் food research centerரில் இந்த கோழி ரொம்பவும் நல்லது என்றும் இந்த கோழியை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும் என்றும், heart problem போன்ற பிரச்சனைகளுக்கு ஏற்றது என்றும் கூறியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஆண்மை பிரச்சனைக்கும் இந்த கோழியை மருந்தாக கூறுகின்றனர். மாதவிடாய் கோளாறுகள் இருக்கும் பெண்கள் இந்த கோழியை சாப்பிட்டால் ,மாதவிடாய் பிரச்சனை சரியாகிவிடும் என்றும் சொல்கின்றனர்

மற்ற கோழிகளுடன் compare பண்ணும் பொழுது கருப்பு கோழியில் அதிக protein, iron, வைட்டமின் B வகைகள், C, E எல்லாம் அதிகமாகவே இருக்கிறதாம். அதோடு மற்ற கோழிகளைவிட கருப்பு கோழியில் கொழுப்பு சத்து குறைவாகவே இருக்கிறதாம். கடக்நாத் கோழியின் முட்டை வளரும் குழந்தைகளுக்கு நல்லது என்றும் , பிரசவம் ஆன பெண்களுக்கும் நல்லது என்றும் கூறுகின்றனர். கடக்நாத் கோழி அதிகமாக முட்டையிடுவது இல்லையாம், அதனாலேயே இந்த கோழியின் ஒரு முட்டை ஐம்பது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த கோழி கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஆனால் கருப்பு நிறத்தில் இருப்பதால் அதிக மக்கள் இதை விரும்பி வாங்குவது இலையாம்.

Top