#KBS: மகாத்மா காந்திக்கு தங்கத்தட்டில் உணவளித்த அவ்வையார் பாட்டி!!
  • 07:35AM Jun 18,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 07:35AM Jun 18,2019 Kodambakkam

தமிழ் சினிமா வரலாற்றி முதல் முறையாக “சூப்பர் ஸ்டார்” அந்தஸ்த்தில் இருக்கும் கதாநாயகர்களை விட ஒரு நடிகை அதிக சம்பளம் வாங்கினார் என்றால் அது கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தான். எழுவதுகளில் ஒரு படத்திற்கு ஒருலட்ச ரூபாயை இவர் சம்பளமாக வாங்கினர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? தனது பதினைந்தாம் வயதிலேயே கே.பி.சுந்தராம்பாள் நாடகங்களில் "ஸ்திரீ பார்ட்டாக" அதாவது கதாநாயகியாக நடிக்கத் துவங்கிவிட்டாராம். இதைவிடவும் சிறப்பாக அவர் "ராஜபார்ட்டாக" அதாவது கதாநாயகனாகவும் நடித்து பெரும் சாதனை படைத்திருக்கிறார்.

maxresdefault-1-696x479.jpg

சரியாக 1919 ஆம் ஆண்டில் ஜாலியன் வாலா பாக்கில் நடந்த படுகொலைச் சம்பவம் இந்திய நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியபோது அதன் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகமாகவே இருந்தது. மேடைக் கலைஞர்கள் மகாகவி பாரதியார் மற்றும் மதுரகவி பாஸ்கரதாஸ் ஆகியோரின் பாடல்களைப் பாடி மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டினார்கள். அதில் கே.பி.சுந்தராம்பாளின் பங்கு சற்று அதிகமென்றே சொல்லலாம்.

page.jpg

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். சரியாக 1937ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ் வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ். அப்போது “எனக்கு சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.

30TH_THEATRE_PIX.jpg

கே.பி.சுந்தராம்பாள் தன்னுடைய சொந்த ஊரான கொடுமுடியில் கே.பி.எஸ் என்றொரு திரையரங்கத்தை தொடங்கினார். அதன் திறப்பு விழாவிற்கு மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்டனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top