"முப்பது வருடங்கள் ஆந்திராவிற்கு முதல்வராக இருந்தாலே போதும்" முன்னாள் முதல்வரின் மகனின் ஆசை
  • 14:29PM Jan 11,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 14:29PM Jan 11,2019 Chennai

ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்வர் Y. S. ராஜசேகர ரெட்டியின் மறைவிற்குப் பின் ஆந்திராவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.மாற்றங்கள் நமையைச் சார்ந்து இல்லை என்று தனிக் கட்சி துவங்கினர் YSR-ன் மகன் Y. S. Jaganmohan Reddy. வரப்போகும் 2019 ஆம் ஆண்டுத் தேர்தலை முன்னிட்டு 2017 ஆம் ஆண்டின் இறுதியில் 3,648 Km பாதயாத்திரையைத் துவங்கினர்.நேற்று தன்னுடைய 14 நான்கு மாத யாத்திரையை இச்சப்புறம் எனும் இடத்தில நிறைவு செய்தார்.

Image result for jagan mohan reddy walk
பாதயாத்திரையை முடித்துவிட்டுச் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன்"தனக்கு பதவிமேல் ஆசை இல்லை,ஆனால் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாவது ஆந்திரா மாநிலத்திற்கு முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறினார்.மேலும்,மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தன்னுடைய தந்தையின் புகைப்படம் இருப்பது போலத் தன்னுடைய புகைப்படமும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த நடைப்பயணத்தின் போது சுமார் 3 கோடி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவின் அரசியல் வரலாற்றில் பாதயாத்திரை எனும் சொல்லுக்கு மிகபெரிய சக்தியுள்ளது.இதற்கு முன்பு NTR-ன் யாத்திரை, 2004 ஆம் ஆண்டில் YSR ன் யாத்திரை,2013 ஆம் ஆண்டுச் சந்திரபாபு நாயுடு 2800 km பாதயாத்திரை அனைத்துமே அவர்களை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தது குறிப்பிடத்தக்கது.ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த யாத்திரையும் வரப்போகும் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top