#Celebrity Facts: 90’s கிட் ஹன்சிகா மோட்வானி பற்றிய சுவாரஸ்யமான பத்து விடையங்கள்!!!
  • 17:27PM Oct 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:27PM Oct 09,2019 Kodambakkam

தமிழ் சினிமாவின் most wanted நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா மோட்வானி. இவரை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் திரு.பூரி ஜகன்னாதன் அவரது “தேசமுதுரு” என்ற தெலுங்கு படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த படத்தின் கதாநயாகன் முன்னணி நடிகர் திரு.அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனுஷ் நடித்த “மாப்பிள்ளை” படம் மூலமாக தமிழ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதே வருடம் “எங்கேயும் காதல்” மற்றும் “வேலாயுதம்” என இரண்டு முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தற்பொழுது அவரது ஐம்பதாவது படத்தில் சோலோ கதாநாயகியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான பத்து விடையங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

hansika-motwani-14-wallpaper.jpg

#1. எங்கேயும் காதல் என்ற படத்தில் நடிக்கும் பொழுது படத்தின் இயக்குனர் பிரபுதேவா அவர்கள் ஹன்சிகாவை “இன்னும் கொஞ்சம் வெயிட் போடுங்க ஹன்சி” என்று சொல்லிவிட்டாராம். அதற்காக ஐஸ்க்ரீம் மற்றும் சீஸ் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வெயிட் போட்டாராம் ஹன்சிகா.

#2. பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக தனது உடல் எடையை குறைத்துக் கொண்டாராம் ஹன்சிகா. இதுவரை 16 கிலோ எடையைக் குறைத்துக் கொண்டிருக்கின்றார் நடிகை ஹன்சிகா.

#3. ஆரம்ப காலத்திலேயே அவரது நடிப்பாற்றலும், முக பாவனைகளும் நடிகை குஷ்பூ போலவே இருந்தமையால் நடிகர் இளைய தளபதி விஜய் அவர்கள் “புலி” படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஹன்சிகாவை “சின்ன குஷ்பூ” என்று கூறியுள்ளார். கொஞ்ச நாள் அதையே அவரது துனைப்பெயராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

#4. அன்று முதல் இன்று வரை படப்பிடிப்பில் அழுகும் காட்சிகளில் நடிகை ஹன்சிகா glycerin பயனடுத்தியதே இல்லையாம். உணர்வு பூர்வமாக நடிக்கும் பொழுது தானாக ஹன்சிகாவிற்கு அழுகை வந்துவிடுமாம்.

#5. ஹன்சிகா தனது பத்து வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்துவிட்டார். Hawa, Koi mil gaya, Aabra ka daabra, Jaago, Hum kaun hai இவை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக நடித்த சூப்பர் ஹிட் ஹிந்தி படங்கள்.

#6. அவர் கதாநாயகியாக நடித்த முதல் தெலுங்கு படம் “தேசமுதுரு”. இந்த படத்தில் நடித்ததற்காக ஹன்சிகா அவர்களுக்கு “Best female debut” என்ற Filmfare விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

#7. ஹன்சிகாவிற்கு ஆரம்பத்தில் தமிழ் சுலபமாக வராமல் இருந்ததால் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா, நயன்தாரா ஆகியோருக்கு குரல் கொடுத்த சவிதா ரெட்டி தான் ஹன்சிகாவிற்கும் தமிழில் குரல் கொடுத்தாராம்.

#8. ஹன்சிகா தனது 26 வயதில் இருந்தே சுமார் 30 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார்.

#9. நடிகை ஹன்சிகா ஆரம்பகாலத்தில் நடிகர் சிம்புவை மனமார காதலித்து வந்துள்ளார். பிறகு சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த சண்டைக்கு காரணம் ஹன்சிகாவின் விலையுயர்ந்த rolex கை கடிகாரம் தான் என்று சிலர் கூறுகின்றனர்.

#10. நடிகை ஹன்சிகா ஒரு painting artist-ம் கூட. ஓய்வு நேரங்களில் அவர் மனதிற்கு பிடித்த புகைப்படங்களை வரைந்து தள்ளுவாராம்.

#Celebrity Facts – “மகா” என்ற படத்திற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்த நடிகை ஹன்சிகா பல ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளாராம். படத்தின் ரிலீசுக்காக தற்பொழுது காத்திருக்கிறார் நடிகை ஹன்சிகா.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top