#Instrumental talent : இந்த வயசில் இப்படியொரு திறமையா? கை விரல்களில் கதக்களி ஆடும் குட்டிப்பாப்பா! (spell pound - talent hunt)
  • 15:34PM Apr 29,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:34PM Apr 29,2019 Tamil Nadu

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் உலக அளவில் நடத்தபட்ட திறமையை நிரூபிக்கும் போட்டியில் முதலிடத்தை பெற்று வந்து சாதனை படைத்தார். பிரபல ஆங்கில படத்தின் இசையை அவர் வாசித்ததை விட அசர வேகத்தில் வாசிந்து மிரள செய்தார் லிடியன் நாதஸ்வரம். அவரின் திறமையை உரிய நேரத்தில் கண்டறிந்து பயிற்சி அளித்ததின் விளைவு இன்றைக்கு, உலக நாடுகள் இந்தியாவின் பெயரை முனுமுனுக்கும் அளவிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். இவரை போல பல சாதனையாளர்கள் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு இடத்தில் தங்கள் திறமையை வெளிக்காட்டிக்கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால் கைதேற்றி விட சரியான வழி இல்லமால், வெறும் வேடிக்கை நிகழ்வாகவே அமைந்து போகிறது அவர்களின் திறமை. சர்கஸில் வித்தை காட்டும் பலருக்கு, இயற்கையிலேயே விளையாட்டு சார்ந்த குணம் இருக்கும், அவர்களை ஊக்கப்படுத்தி பயிற்சியளிக்கும் பட்சத்தில் பல விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல முடியும். ஆனால் அவர்கள்  செய்வதை ஒரு தொழிலாக பார்த்து அப்படியே கடந்து வந்து விடுகின்றனர். கடற்கரை ஓரம் வசிக்கும் சிறுவர்களுக்கு நீச்சல் குணம் இரத்தத்தோடு ரத்தமாக ஊறி போயிருக்கும். அவர்கள் மீனவர்கள் தான் என்று பலரும் கடந்து செல்வதால் அவர்களின் திறமையும் மறைக்கப்பட்டு விடுகிறது. இப்படி இயற்கையாகவே ஒவ்வொரு இன மக்களிடமும் இருக்கும் திறமையை ஊக்கப்படுத்தி அதனை வெளிக்கொண்டு வருவதன் மூலம், பல துறைகளில் ஒரு நாடு பல்வேறு சாதனைகளை படைக்க முடியும். அந்த வரிசையில் சிறுமி தானே என்று நினைத்து வேடிக்கை பார்த்தவர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுத்து தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த காட்சியை இனி வரும் வீடியோவில் காணலாம்.

அடினா இது தான் அடி பாத்துகோங்க:

#Instrumental talent : இப்படி பல திறமையாளர்களை ஏதோ ஒரு மூலையில் ஒளித்து வைத்துக்கொண்டு தினம் தினம் புதிய தேடுதலை மேற்கொள்வதை விட ஏற்கனவே திறமை இருந்தும்  வாய்ப்புக்காக ஏங்குபவர்களுக்கு ஒரு தளத்தை அமைத்துக்கொடுத்தால், நம் மண்ணில் இருந்து இன்னும் பல சாதனையாளர்கள் உலக அரங்கிற்கு செல்வார்கள்.

 

Share This Story

முருகானந்தம்

Top