#Inspiring Story: சட்டக்கல்லூரியில் மகளுக்கு ஜூனியராக படித்து வரும் தந்தை!!!
  • 11:20AM Aug 19,2019 Mumbai
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:20AM Aug 19,2019 Mumbai

தற்பொழுது மும்பையின் ஹாட் டாப்பிக் இது தான். தனது படிப்பை குடும்பத்திற்காகப் பாதியிலேயே நிறுத்திவிட்டுக் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி அதில் வெற்றியும் பெற்றவர் திரு.ராஜேஷ் எனும் தொழிலதிபர். இவர் படிக்காவிட்டாலும் தனது மூன்று பிள்ளைகளையும் பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார். ராஜேஷ் அவர்களது மகளான துருவி வோரா மும்பையில் சட்டக்கல்லூரியில் படித்து வந்த பொழுது தனது தந்தைக்கு சட்டப்படிப்பு படிக்க அதீத ஆர்வம் இருப்பதை அறிந்துள்ளார். தந்தையின் கனவை நிறைவேற்ற அவரை தான் படிக்கும் கல்லூரியிலேயே சேரவைத்து படிக்கவும் வைத்துள்ளார். தற்பொழுது தனது மகளுக்கு ஜூனியராக படித்து வருகின்றார் ராஜேஷ். பிரபலமான ஃபேஸ்புக் பக்கமான “Humans of Mumbai” என்ற பக்கத்தில் இந்த தந்தை மகள் கதை கடந்த வாரம் பதிவாகி இருந்தது.

Inspiring Father

Inspiring Story

Dhruvi Vora

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top