#condoms: ஐயோ! ஆணுறையா? இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே!
  • 13:12PM Jul 12,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:12PM Jul 12,2019 India

விவேக் நடிச்ச ஒரு காமெடியில 'பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்'ன்னு வர விளம்பரத்த பார்த்து, காண்டம் பயன்படுத்தாம இருப்பாங்க ஒரு குடும்பம். கவர்மெண்டு எந்த பிளாஸ்டிக்னு சொல்லாம விட்டு, இப்படி ஆகிருச்சே நிலமைன்னு விவேக் பீல் பண்ணுவாரு. அந்த காமெடி எல்லாம் வந்து பல வருசம் ஆயிருச்சு. இப்போ நம்ம இந்திய ஆண்கள் மத்தியில, காண்டம் குறித்த விழிப்புணர்வும் வந்துருச்சு. இருந்தாலும் காண்டம் பயன்படுத்த ஆண்கள் விரும்புறது இல்லைன்னு தெரிய வந்துருக்கு.

your image

சரியா சொல்லணும்னா 94 சதவிகித ஆண்கள் காண்டம் பயன்படுத்தி உறவு வெச்சுக்க தயங்கறாங்க. இப்படியே போனா 2027 ஆம் ஆண்டு, இந்தியா உலக மக்கள் தொகையில முதல் இடம் பிடிக்குமாம். முக்கியமான நேரத்துல ஒரு உறைய போட்ருந்தா, இப்படி ஆயிருக்குமான்னு காமெடியில சொல்லுற மாதிரி கேட்க வேண்டி இருக்கு இப்ப. இத்தனைக்கும் நம்ம ஆட்கள திருப்தி படுத்த ஸ்ட்ராபெரி, சாக்லேட், லிச்சின்னு சொல்லி பல ஃபிளேவர்ல காண்டம் கிடைச்சாலும் முடிவுல இருந்து மாற மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க.

your image

இந்தியாவ பொறுத்த வரைக்கும் கிட்டத்தட்ட 95 சதவீத திருமணமான தம்பதிகள், குறிப்பா 15 வயசுல இருந்து 49 வயது வரைக்கும் கருவுறுதல் உச்சத்தில் இருக்கும் வயதில் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில்லைன்னு தெரிய வந்துருக்கு. ஒட்டுமொத்த இந்தியாவுலயும் ஆந்திரால தான் ஆணுறை பயன்பாடு ரொம்ப கமியா இருக்கு. ஆனா யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஆணுறை பயன்பாட்டு விகிதம் அதிகமா இருக்கு. நம்ம ஊர பொறுத்த வரைக்கும் ஆணுறை பத்தி எல்லாமே தெரிஞ்சாலும், பயன்படுத்த மட்டும் தயங்கறாங்க. | இரவு 10 மணிக்கு பிறகு தான் ஆணுறை..?

குடும்பத்துல பெண்ணுக்கு மட்டும் தான் குடும்ப கட்டுப்பாடு பண்ணனும், ஆண்களுக்கு தேவை இல்லங்கற மாதிரி நினைக்கறாங்க. எதிர்பாராத கருவுறுதல் நடந்தாலும், அந்த பழி பெண் மீது தான் போடப்படுது. ஆண்கள பொறுத்த வரைக்கும் ஆணுறை போடுறது, குடும்ப கட்டுப்பாடு பண்ணுறது, இதைய எல்லாம் ஒரு கவுரவ குறச்சலா பாக்குறாங்க. பல பால்வினை நோய் இது மூலமா தடுக்கப்படுதுன்னு தெரிஞ்சிருந்தும், முறைகேடான உறவுகளில் கூட ஆணுறை பயன்பாடு குறைவா இருக்குங்கற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கு. | கர்ப்பத்தை தடுக்க ஆணுறை மட்டும் தான் உள்ளதா..?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top