#economy : ஒரு வாய் சோறு கூட நமக்கு இல்லையா.? இந்தியாவில் மொத்தமாக கை வைக்க இருக்கிறது மேற்கத்திய நாடுகள்.!
  • 18:19PM Jun 15,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 18:19PM Jun 15,2019 India

அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவின் 61இலட்சம் கோடி உணவுத் துறையில் மொத்தமாக கை வைக்க இருக்கிறது மேற்க்கத்திய நாடுகள். ஆமாங்க 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் உணவுத் துறையில் கால் பதிக்கும் திட்டத்தை செயல்முறைப்படுத்தியது மேற்கத்திய நாடுகள். அத்தனை கம்பெனிகளையும் 2020க்குள் ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவிற்குள் நுழைக்கும் திட்டம் முடிந்தது. உளவியல் ரீதியான விளம்பரங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சி எனும் மாயை உருவாக்கி Noodles, Health Drinks, Fast foods, Processed foods, snacks, chocolates என Nestleம் Unileverம் போட்டி போட்டுக் கொண்டு இந்திய சந்தையைக் கைப்பற்ற திட்டங்களை செயல்படுத்த, அவற்றின் பின்பக்க மறைமுக முதலாளிகளான இங்கிலாந்து பெரும் தலைகள் அத்தனைக்கும் அதிகாரத்தால் வழி செய்து கொடுத்துவிட்டனர்.

இனி 2020-லிருந்து, அடுத்த இந்திய மக்களின் இன்றியமையாத உணவான இறைச்சியில் கை வைக்க இருக்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை 2020ல் 61 இலட்சம் கோடி உணவு கொள்முதல் சந்தை, 2040 இல் 130 இலட்சம் கோடிகளையாவது எட்டும் என்பது உலக வல்லுனர்களின் கணிப்பு. கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, மீன் உணவு ஆகிய அனைத்து உணவு சந்தையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள் மேற்கத்தியர்கள். அதற்காக தற்போதைய அரசுக்கு என்ன விலை வேண்டுமானலும் தரப்போகிறார்களாம்.

அவர்கள் சம்பாதிக்க இருக்கும் இலாபத்தில் அவர்கள் இன்று செலவிடுவது மிகச்சிறிய முதலீடே.இதற்கு முக்கிய உணவு உற்பத்திக்கிடங்கான (கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள மாநிலம்) தமிழ்நாட்டையும், தெற்கில் மீன் வளம் அதிகமுள்ள கடற்பகுதிகளையும் தகுதியற்றதாக்கும் முயற்ச்சிகளே இன்றைய நிலை. இன்னும் சில அரசியல் காரணங்களும் உண்டு.

2000 ஆம் ஆண்டு தண்ணீரை பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று சொன்னால் நமக்கு சிரிப்பு வந்திருக்கும் இல்லையா?. கூடிய விரைவில் அனைத்து உணவையும் இன்று நாகரீகத்திற்காக சூப்பர் மார்கெட் சென்று பாக்கெட்டில் வாங்குவது போல, பின்னாளில் கட்டாயமாக பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து வரும் கார்பரேட் கம்பெனிகளின் Processed உணவுகளை மட்டுமே வாங்கும் நிலைக்கு வர இருக்கிறோம். வருங்கால சந்தையை புரிந்து, அதை நோக்கித் திட்டமிடுவது சிறந்த தொழில் முனைவோரின் புத்திசாலித்தனமான செயல்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top