Rainforest

#Tourism and Travel Management : சுற்றுலா பத்தி கூட படிப்பு இருக்கு தெரியுமா? ஜாலியா படிக்க ஈஸியான வழி!

Apr 27 2019 08:00:00 PM

Gwalior, Bhubaneswar, Noida, Nellore மற்றும் Goa ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் Ministry of Tourism அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற ‘Indian Institute of Tourism and Travel Management’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மேலாண்மை படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.

#1. படிப்புகள்: Masters in Business Administration (Tourism and Travel), Bachelors in Business Administration (Tourism and Travel)

#2. தகுதிகள்: Bachelors in Business Administration படிக்க பள்ளிப் படிப்பை முடித்தவராகவும், Masters in Business Administration படிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

#3. மேலும் முதுநிலை படிப்பிற்கு MAT, CAT, CMAT, XAT, GMAT, ATMA ஆகிய தகுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டியது அவசியம். இந்த தேர்வுகளை எழுதாதவர்கள் IITTM  நடத்தும் IGNTU IITTM Admission Test (IIAT) நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும்.

#4. விண்ணப்பிக்கும் முறை: IITTM கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். (http://www.iittm.ac.in/New%20Dos/IITTM_Steps%20to%20Fill%20Form.pdf)

#5. சேர்க்கை முறை: தகுதித் தேர்வு அல்லது நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும்.

#6. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 17

#7. மேலும் விவரங்களை அறிந்துகொள்ள www.iittmb.in  என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

#Tourism and Travel Management: ஒரே மாதிரியான படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக ஏதாவது படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் இந்த படிப்பு சிறந்த தேர்வாக இருக்கும்.