#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி!!!
  • 15:53PM Sep 19,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:53PM Sep 19,2019 Kodambakkam

பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய ஓர் இயல்பான மற்றும் இயற்கையான சம்பவம் தான் பெண்கள் வயதிற்கு வருவது. ஆனால் அது அவர்களது உடல் மற்றும் மனதளவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றது. பெண்களின் மூலையில் இருக்கும் hypothalamus என்ற பகுதி gonadotropin releasing hormone என்ற hormone-னை விடுவிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது தான் ஒரு பெண்ணானவள் பருவமாடைகின்றாள். இந்த நிகழ்வு மேலும் LH மற்றும் FSH என்ற  ஹார்மோன்களை சுரக்க pituitary gland-டிற்கு தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிகழ்வானது பெண்களுக்கு பத்து முதல் பதினான்கு வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

1.jpg

#1. பருவமடைவதற்கு முதல் அறிகுறியாக ஒரு பெண்ணுக்கு மார்பக வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும். அக்குள், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி தென்படும். சில பெண்களுக்கு முகம், நெற்றி மற்றும் முதுகில் பருக்கள் வரலாம்.

#2. மாதவிடாய் அதாவது, உதிரப் போக்கு வரத் தொடங்கும். முதல் மாதவிலக்கு வந்ததை அடுத்து பெண்களின் உயரமும் கிடுகிடுவென அதிகரிப்பதைப் பார்க்கலாம். இது 2 முதல் 3 வருடங்களில் அவர்களது உயரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

#3. மேலே சொன்ன அறிகுறிகள் பருவ வயதில் இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. அதே நேரம் முதல் மாதவிலக்கும் அதையடுத்த அவர்களது சுழற்சியும் எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. இந்த வித்தியாசம் பெண்களின் வயது, மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு, பிறகு அது நீடிக்கும் நாட்கள் என எல்லாவற்றிலும் இருக்கலாம்.

#4. சிலருக்கு 7 வயதில் கூட இந்த நிகழ்வானது நடக்கலாம், அந்த நிலையை Precocious Puberty என்கிறோம். இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, இளவயது மன அழுத்தம் எனப் பல விஷயங்களின் காரணமாக பெண் குழந்தைகளின் பருவம் வரும் வயதானது குறைந்து விட்டது உண்மைதான்.

#5. ஆனாலும், 7 வயதுக்கு முன்பாகவே ஒரு பெண் குழந்தைக்கு பருவமடைதலின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

#6. இன்னும் சில பெண்களுக்கோ பருவமடையும் வயது வழக்கத்தைவிட தள்ளிப் போகலாம். பெரும்பாலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதைப் பார்க்கலாம். சரியாக 14 வயதுக்கு மேலும் பருவமடையாதா பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும், ஆலோசனையும் அவசியம்.

#Puberty - வயதிற்கு வராததற்கு வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் காரணமா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மிக மிக அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதால் பயப்படத் தேவையில்லை.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top