#Industrial Tour: மாணவர்களின் Picnic-காக மாறியிருக்கும் Industrial Visit-டின் முக்கியத்துவம் இதுதான்!!!
  • 16:51PM Aug 13,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:51PM Aug 13,2019 Kodambakkam

எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் இறுதி ஆண்டில் அல்லது மூன்றாது ஆண்டில் கல்லூரி சார்பாக மாணவர்களை படிப்பு சார்ந்த தொழிற்சாலைகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்காக பரிந்துரைக்கப்படுவார்கள். இதற்கு ஆங்கிலத்தில் industrial visit என்று பெயர். படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் பாடத்தில் கற்றுக்கொண்டதை நேரடியாக பார்த்து அனுபவப்பூர்வமாக தெரிந்துக்கொள்ள இந்த industrial visit உதவும். தமிழகத்தில் எல்லா தொழிற்சாலைகளும் மாணவர்களின் வளர்ச்சிக்காக அவர்களது வருகையை ஏற்றுக்கொள்கின்றனர். கல்லூரிப் பாட நூல்கள் மற்றும் விரிவுரைகளால் மட்டும் கற்றல் முடிவு பெறாது. அனுபவத்தால் மட்டுமே முழுமை பெரும். இதற்காகவே மாணவர்களை industrial visit செய்ய கல்லூரிகள் பரிந்துரைக்கின்றது. இதனால் மாணவர்களுக்கு கிடைக்கப் பெரும் முக்கியமான நன்மைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

#1. Industrial visit மாணவர்களுக்கு ஒரு நிறுவனத்தின் முக்கியமான நிர்வாகக் கருத்துகளைப் பற்றி அதிகமான விளக்கங்களைத் தருகின்றன, கல்லூரி பாடங்களில் மாணவர்கள் கற்றுக்கொண்டது இங்கே எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நடைமுறையில் சொல்லித்தரப்படுகின்றன

 

#2. தொழில்முறை கல்வியைத் தொடரும் மாணவர்கள் ஒரு நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல், நிதி, செயல்பாடுகள், விநியோகச் சங்கிலி போன்றவைகளின் செயல்பாடுகளைப் பற்றி நேரடியாக பார்த்து கற்றுக்கொள்ள முடியும்.

 

#3. Industrial visit ஆனது மாணவர்களின் கல்லூரி படிப்பிற்கும் நடைமுறை படிப்பிற்கும் உள்ள இடைவெளியைக் குறைகின்றது.

 

#4. ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரடியாக பார்த்து கற்றுக்கொள்வதனால் அவர்கள் எந்த மாதிரியான உத்தியோகத்தில், எந்த மாதிரியான வேலையை செய்யப்போகின்றனர் என்பது பற்றிய விஷயங்களில் தெளிவு பிறக்கும்.

 

#5. ஒரு நிறுவனத்தில் ஒரு பொருளை தயாரிக்க எந்த மாதிரியான கட்டமைப்புகளைப் பின் தொடருகின்றனர் என்ற விளக்கம் மாணவர்களுக்கு கிடைக்கும்.

 

#6. வருகைத் தந்திருக்கும் நிறுவனத்தில் இருக்கும் தனித்தனி டிப்பார்ட்மென்ட்களின் செயல் முறை விளக்கம் கிடைக்கபெறம்.

 

#Industrial Tour - ஒரு மாணவனுக்கு தேவையான ஒன்று. பெரும்பாலான மாணவர்கள் இதை பிக்னிக் செல்வதுபோல எடுத்துக்கொள்கின்றனர். இதன் உண்மையான நோக்கத்தை புரிந்துக்கொண்டால் மாணவர்களால் அதிகம் சாதிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top