#Beauty:முக அழகை முழுவதுமாகப் பாதுகாக்கும் வாழைப்பழம்..!
  • 15:34PM May 04,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 15:34PM May 04,2019 Chennai

வாழைப்பழத்தை தினமும் உண்பதால் உடலுக்குப் பல நன்மைகள் உள்ளது.பலத்திற்கு எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதை விட அதன் தோலில் அதிக நன்மைகள் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? வழைத் தோலில் முக அழகை பல குணங்கள் உள்ளது.

Image result for banana skin
#1. வாழை தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் நீரை குடித்தால்,சரும பிரச்சனைகள் நீங்கி உடல் பொலிவடையும்.

#2. காலையில் தினமும் வாழைப்பழ தோலை வைத்துப் பற்களைத் தேய்த்து வந்தால் பற்கள் வெண்மையாகும்.

#3. குளிர்காலத்தில் சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளது. அது போன்ற நேரத்தில் வறண்ட பகுதிகளில் வாழைப்பழத்தின் தோலை வைத்து தினமும் தேய்த்து வந்தால் வறண்டு போகும் சருமம் பொலிவடையும்.

#4. வாழை தோலை வைத்து முகத்தை நன்றாக மசாஜ் செய்தால் வெயில் காலங்களில் சருமத்தில் உண்டாகும் கருமை வளையங்கள் நீங்கும்.

#5. முகத்தில் மருக்கள் வந்துவிட்டால் இந்தத் தோள்களை வைத்து நன்கு தடவினால் மருக்கள் பரவாமல் தடுக்கும்.

#6. வாழைப்பழ தோலை இமைகளில் வைத்து மசாஜ் செய்தால் கண்கள் குளிராடையும்.

சரும பிரச்னைகளையும் தாண்டி முக அழகை பொலிவாகக் காட்டும் குணம் வாழை தோலில் உள்ளது. இயற்கையாகப் பொலிவடையாளம் என்பதற்கு வாழைத் தோலும் ஓர் உதாரணம்.

Top