#Illegal relationship: பெருகி வரும் கள்ளக்காதலுக்கு காரணம் என்ன? ஆபாசம் அசிங்கம் தாண்டி வன்முறையில் முடியும் சம்பவம்!
  • 13:30PM Sep 24,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:30PM Sep 24,2019 Tamil Nadu

நீண்ட காலமாக முறைகேடான உறவு இருந்து வந்தாலும், சமீபத்தில் அதன் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் அக்கம் பக்கத்தில் கிசு கிசு போல பேசப்பட்டு வந்த உறவுமுறை, இன்றைக்கு ஊடகத்தில் வெட்ட வெளிச்சமாக போடப்படும் அளவுக்கு சாதாரணமாகி வருகிறது. வெளியில் சொல்ல வெட்கப்பட்ட விசயத்தை, இன்றைக்கு பலருக்கும் தெரிந்தால் தெரியட்டும் என்ற அசட்டை போக்குடன் கையாள்கின்றனர். இந்த மாதிரியான பந்தங்கள் ஆபாசம், அசிங்கம் என்ற நிலை எல்லாம் தாண்டி வன்முறையில் முடிகின்றது. கணவன்/ மனைவியைக் கொல்லுதல், உறவுக்கு தடையாக இருக்கும் குழந்தைகளை, பெற்றோர்களே கொல்லுதல் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால், ஒரு சில விசயங்கள் கண்முன் வந்து போகின்றன. பொருந்தாத திருமணங்கள், குடும்பத்தில் நிலவும் வறுமை மற்றும் கணவனின் கொடுமை, தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை, அன்பு ஆதரவு இல்லாத நிலை, கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாக பிரிந்திருத்தல், ஆபத்தான சமுக வலைதள நட்புகள் இவை தான் முக்கிய காரணமாக அமைகின்றன. இவற்றுக்கான தீர்வு எங்கு கிடைக்கிறதோ அதை நோக்கி மனதை அலைபாய விட்டுவிடுகின்றனர். சரியாக பேசி தீர்த்தலே முடிந்துவிட வேண்டிய பிரச்சனைகள் இவை, ஆனால் மனதிற்குள் போட்டு வைத்து, அதனை வேறொரு இடத்தில் வெளிப்படுத்தி விடுகின்றனர். முடிந்த வரையில் இதனை தடுக்க ஒரு சில வழிகளை கையாளலாம்.

#1. குடும்பத்தில் இருவருக்குள் எந்த பிரச்சனை வந்தாலும், அதில் மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் அவர்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

#2. குறிப்பாக பெண்கள் சோஷியல் மீடியாவில் உள்ள முகம் தெரியாத நபர்களிடம் தங்கள் பிரச்சனைகளை கூறக்கூடாது. ஆறுதல் என்ற பெயரில் வலையில் சிக்க நேரிடும்.

#3. நிலையான குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும், எந்த ஒரு தகாத உறவுகளிலும் ஒரு போதும் கிடைக்காது என்பதை உணர வேண்டும். 

#4. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக, வாழ்க்கை முழுவதும் நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

#5. முடிந்த வரை குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும். இருவரின் குறை,நிறைகளை விவாதித்து அப்போதே தீர்வு காண வேண்டும்.

#6. தம்பதிகளிடம் சகிப்புத்தன்மை ரொம்ப ரொம்ப முக்கியமானது. இருவரும் விட்டு கொடுத்து வாழ்ந்த வீடுகளில் வழிதவறி போகுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

#7. அந்த காலத்தை போல பெற்றோர்களுடன் இணைந்து கூட்டு குடும்பமாக வாழ்ந்தால் இந்த நிலை குறைய வாய்ப்புண்டு.

#Illegal relationship: குடும்ப உறவின் முதல் எதிரி சந்தேகம் தான். தம்பதிகளுக்கு இடையில் இருக்கும் உறவில் நம்பிக்கை மிக முக்கியமானது. | ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES!!! கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top