இந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..!
  • 14:23PM May 25,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 14:23PM May 25,2019 Chennai

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.பிரசாரத்தில்இந்துத்வ ஆதரவு கொடியை உயர்த்திய பாஜாகவின் கூட்டணிக்கு 353 இடங்கள் கிடைத்தது.கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் இம்முறை வெறும் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியும் படுதோல்வி அடைந்தார்.இருப்பினும் அவர் போய்ட்டியிட்ட வயநாடு தொகுதியில் பிரமாண்ட வெற்றியை பெற்றார்.ராகுலின் வெற்றியை Indian Union Muslim Leauge தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக வயநாட்டில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது Indian union muslim leauge தொண்டர்கள் யாரும் பச்சை கொடி காட்ட வேண்டாம்,அது வட இந்தியாவில் காங்கிரஸின் வெற்றியை பாதிக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் சொன்னதாக வதந்திகள் பரவியது.அதையெல்லாம் பொடியாகும் வகையில் Indian Union Muslim leauge தொண்டர்கள் ராகுலின் வெற்றியை கொண்டாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top