#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும்? அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு
  • 13:22PM May 22,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 13:22PM May 22,2019 Chennai

RADAR மூலம் புவியை ஆய்வு செய்வதை விரிவாக்கம் செய்யும் வகையிலான RISAT2B சேட்லைட்,PSLV C 46 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக இஸ்ரோ ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது.இந்த சேட்லைட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்,

#1. புவி ரேடார் படங்களின் மூலம் ஆய்வு செய்வதை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் RISAT2B விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

#2. RISAT வகையிலான சேட்லைட்டை எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரோ மீண்டும் கையில் எடுத்துள்ளது.

#3. வானிலை குறித்த அனைத்து வகையான தகவலையும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டது.

#4. PSLV லிஸ்டில் இந்த ராக்கெட் 48-வதாகும்,இதன் எடை 615 கிலோவாகும்..

#5. PSLV C 46, 555 கி.மீ ஆர்பிட்டரியில் 37 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

#6. RISAT2B சேட்லைட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டாகும்.இதன் சிறப்பு x band radar மூலம் புவியை கண்காணிப்பது.

#RISAT2B: விவசாயம், வனப்பகுதி மற்றும் பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு போன்றவற்றிற்கு தேவையான வசதிகளைப் பெற இந்த சேட்லைட் சிறப்பானதாக இருக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top