இவங்கள வெச்சு தான் இந்தியா வோர்ல்ட் கப்பே தூக்க போகுது - யார் யாருன்னு கொஞ்சம் உள்ளே போயி பாருங்க..!
  • 11:17AM Apr 13,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:17AM Apr 13,2019 India

ஏப்ரல் 15 ஆம் தேதி மும்பையில் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் கேப்டன் கோலி தலைமையில் 15 வீரர்கள் களமிறங்க உள்ளனர். இதில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னரே யார், யார் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று உத்தேச அணி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - ரோஹித் சர்மா ஜோடி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது பேட்ஸ்மேனாக விராட் கோலி களமிறங்குவார்.

அவருக்கு அடுத்து நான்காவது இடத்தில் யார் இருப்பார் என்பதில் தான் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது. சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணியில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் ராயுடுவே நான்காவது வீரராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.வழக்கம் போல ஐந்தாவது இடத்தில தோனி களமிறங்குகிறார். ஆறாவது நிலையில் கேதர் ஜாதவும் இடம்பெறுகிறார். அடுத்து இருக்கும் டெயில் என்ட் வரிசையில் ஏழாவது இடத்தில ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற வாய்ப்புள்ளது. எட்டாவது இடத்தில  ஆல்ரவுண்டர் ஜடேஜா களமிறங்குகிறார்.

ஒன்பதாவது இடத்தில் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்து வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும், புவனேஸ்வர் குமாரும் இடம்பெறலாம். பின்னர் இறுதி நிலையில்  ஸ்பின்னர் சாஹலும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டும் இடம்பெறக்கூடும். 15வது இடத்தை பிடிக்க தமிழக வீரர் விஜய் சங்கருக்கும், கே.எல். ராகுலுக்கும் மிகக்கடுமையான போட்டி சூழல் உருவாகியுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top