#Kidney Stone: கத்தியின்றி ரத்தமின்றி சிறுநீரக கற்களை அகற்ற ஒரே வழி இதுதான்!!!
  • 12:11PM Oct 15,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:11PM Oct 15,2019 Kodambakkam

இக்காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சிறுநீரக கல் பிரச்சனையால் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இந்த சிறுநீரக கல் பிரச்சனைக்கு ஒரு அற்புதமான மருந்தை தனது கண்டுபிடிப்பின் மூலம் உலகிற்கு கூறியுள்ளார். அதே வேறொன்றும் இல்லை வெறும் எலுமிச்சைப் பழ ஜூஸ் தான். ஆம் வாசகர்களே எலுமிச்சை சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறதாம். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில் தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

#1. வெளிநாடுகளில் இதை ஒரு சிகிச்சையாகவே தருகின்றனர். இதற்கு “லெமனேட் தெரபி” என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு முறை வீதம் தினமும் பருகுவது தான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை அல்லவா? இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

4.jpg

#2. சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்த பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட் தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

3.png

#3. கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி, பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி என மூன்று சிகிச்சைகள் உள்ளன. இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

1.jpg

#4. ஒரு முறை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும் என்கிறார் ரோஜர் சர். அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர். புண்ணியவான் நல்லா இருக்கட்டும்.

5.jpg

#Kidney Stone – சிறுநீரக கல் வந்த பிறகு “அய்யோ.. அம்மா...” என்று அலறுவதை விட, வருவதற்கு முன் இந்த எலுமிச்சை சாறை அடிக்கடி குடித்து சிறுநீரக கல் பிரச்சனை கடைசிவரை வராமல் தடுப்பது மேலானது. எழுமிச்சை நமது உடல் சூட்டை தணிக்கும் சக்தி படைத்ததும் என்பதும் குறிப்பிடத்தக்கது. Top of Form

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top