#Lip Care: உதடுகளைச் சுற்றுள்ள கருமையை போக்கி, ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான உதடுகளை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
  • 16:13PM Oct 28,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:13PM Oct 28,2019 Kodambakkam

நமது முகத்தில் இருக்கும் எல்லா உறுப்புகளுமே முக்கியமான ஒன்று தான். ஆனால் அழகு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கண்களுக்கு அடுத்தபடியாகப் பார்க்கப்படுவது நமது உதடுகளை தான். காரணம் மனதளவில் பொங்கிவரும் அன்பைக் கண்கள் எடுத்துக் காட்டுகிறது. நமது வாழ்க்கைத் துணை மீது இருக்கும் அலாதியான ஆசையை வெளிக்காட்ட உதடுகள் தானே உதவுகிறது? நமது உதடுகள் அழகாக, செழுமையாக, சிவப்பாக இருக்கவில்லையே என்று பலரும் ஏங்கி வருகின்றனர். உதடுகளில் சாயம் போட்டு தங்களது உண்மையான தோற்றத்தை மறைத்துக் கொள்கின்றனர். இப்படி செயற்கையான அழகை எத்தனை நாட்கள் பின்தொடர முடியும் சொல்லுங்கள். இந்த வீண் செலவுகளையும், ஒப்பனைகளையும் ஓரம் கட்டிவிட்டு இந்த குறிப்புகளை பின்பற்றினால் உங்கள் உதடுகள் நிரந்தரமான வளமையையும், அழகையும் பெரும்.

1.jpg

#1. உதடுகள் கருமையாக இருக்கிறதா? அப்படி இருந்தால் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் ஸ்க்ரப் செய்து வர உதடுகளில் உள்ள கருமை நீங்கும். மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது உதட்டில் தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.

#2. எலுமிச்சை சாற்றை மட்டும் உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்-பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.

#3. எலுமிச்சை சாற்றில் சிறிதளவு மஞ்சள் கலந்து உதட்டில் தடவி, பத்து நிமிடம் ஊற வைத்து கழுவவும். தினமும் இதைச் செய்து வர விரைவில் உதடுகளின் நிறம் மாறும்.

#4. தினமும் இரவு சிறிதளவு ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி வர சில நாட்களில் உதடுகளைச் சுற்றியுள்ள கருமை நிறம் மறைந்து பளிச்சென்று மாறிவிடும்.

#5. உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.

#6. உப்பு கலக்காத வெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு வெடிப்பு சரியாகி மென்மையாகும்.

#7. பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி உதடுகள் ஃபிரஷ் ஆன தோற்றம் பெரும்.

#Lip Care - கிளிசரின் லிப்-பாம் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், உதட்டை நீண்ட நேரம் ஈரத்தன்மையுடன் வைத்துகொள்ளலாம். மேலும் அது உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top