#Impressed: மனைவியின் மனதைக் கொள்ளையடிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் தந்திரங்கள்!!!
  • 17:16PM Oct 14,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:16PM Oct 14,2019 Kodambakkam

புதிதாக திருமணமான தம்பதிகள் இடையே ஒரு மெல்லிய கொடு போன்ற இடைவெளி இருந்துகொண்டே தான் இருக்கும். அந்த கொட்டை முற்றிலுமாக அளித்து அவர்களை ஒருவரோடு ஒருவராக பின்னிப்பிணையவைப்பது தாம்பத்தியத்தில் அடையும் முழுமையான இன்பம் மட்டுமே. ஆனால் இதை சில கணவன்மார்கள் தவறாக புரிந்து கொண்டு தங்களது முழு வீரியத்தையும் மனைவி மீது பிரயோகம் செய்துவிடுகின்றனர். இது ஒரு மனைவிக்கு அவளது கணவன் மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடுகிறது. மனைவியின் மனதை எல்லா விதத்திலும் கொள்ளையடிப்பது எப்படி என்று சில உளவியல் நிபுணர்களின் கூறும் விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

#1. திருமணமான புதிதில் உங்கள் காதல் மனைவியோடு அதிக நேரம் ஒதுக்கி அவர்களை மனம் குளிர வைப்பது அவசியம். கட்டிலில் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் சில பெண்கள் எங்காவது பொது இடங்களுக்கு செல்லும் போது தன்னுடைய கணவன் தன்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களாம். பார்க், பீச், சினிமா என்று போகும் போது கொஞ்சம் கொஞ்சலும், கொஞ்சம் உரசலும் இருக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

2.jpg

#2. புதிதாக திருமணமானவுடன் எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை மனைவியிடம் வெளிப்படுத்திவிடாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதானமாகி விடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். கொஞ்சம் விட்டுகொடுத்து போக பழகிக்கொள்ள வேண்டும். “ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன்” என்று சமாதானமாகவே பேச வேண்டும். இது உங்கள் மனைவியை கண்டிப்பாக மனங்குளிர வைக்கும் சமாதானமும் படுத்திவிடும்.

3.jpg

#3. அலுவலகத்தில் எத்தனை டென்ஷன்களை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட கோப தாபங்களை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள். உங்கள் மனைவி உங்கள் மீது ஒருவேளை கோபமாக இருந்தால் அலுவலகம் விட்டு வரும் போது ஏதாவது ஒரு பரிசை வாங்கி வாருங்கள். சின்ன முத்தம், அன்பாய் ஒரு தழுவல் என பாசத்தோடு அந்த பரிசுப் பொருட்களை கொடுத்துப்பாருங்கள்.

4.jpg

#4. சமையலறையில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது உதவும் சாக்கில் சின்ன சின்ன சில்மிஷங்களை செய்யுங்கள். இது போன்ற ரொமான்ஸ் நடவடிக்கைகளை எத்தனை வயதானாலும் பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். இப்படிப்பட்ட செயல்களை பெண்களுக்கு சமையல் அறையில் ஏற்படும் சிரமத்தை குறைக்கிறதாம்.

5.jpeg

#5. அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் அதிகம் மகிழ்கின்றனராம். படுக்கை அறையில் தன் பேச்சை கேட்க வேண்டும், தான் சொல்வதற்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுவதை விட அவர்களையும் கொஞ்சம் சுதந்திரமாக செயல்பட விட்டுப்பாருங்கள். உணர்வுபூர்வமான இந்த சுதந்திரம் உங்களின் மனைவியின் மனதில் உங்களை ஹீரோவாக எடுத்துக் காட்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

5.jpg

#Impressed - இந்த சின்ன சின்ன விஷயங்கள் உங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும். மனைவியிடம் அலாதியான நெருக்கம் உண்டாகும். அப்போது உங்கள் மனைவியின் மனதை சுலபமாக நீங்கள் கொள்ளையடிக்கலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top