#Computer Speed Up : எந்த சாப்ட்வேரும் இல்லாமல் உங்க கம்ப்யூட்டர மின்னல் வேகத்தில் இயக்க வைக்கலாமா.?
  • 10:20AM Jun 24,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:20AM Jun 24,2019 India

Computer மெதுவா வொர்க் ஆனா சிலர் அந்த clean, இந்த cleanன்னு சொல்லி ஏகப்பட்ட சாப்ட்வேர் போட்டு வெச்சிருப்பாங்க. அது உங்க Computer clean பண்ணுதோ இல்லையோ, அது பண்ணு, இத பண்ணுன்னு புது புது சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண சொல்லி கேக்கும். RAM கமியா இருக்க Computer-ஆ இருந்தா, நாம fast-காக போட்ட சாப்ட்வேரே Computer-ஆ slow பண்ணி விட்டுரும். ஒரு சில முறைய, பாலோவ் பண்ணாவே, எந்த சாப்ட்வேரும் தனியா இதுக்கு தேவை இல்ல. வண்டி வாங்கினா, குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை, சர்வீஸ் பண்ணுவம்ல அந்த மாதிரி Computer-க்கும் பண்ணா தான் OS பிரச்சனை, மெதுவா வொர்க் ஆகற பிரச்சனை வராம ரொம்ப நாளுக்கு யூஸ் பண்ண முடியும். எதுவுமே கண்டுக்காம, ஆன் பண்ணி, வேலைய முடிச்சுட்டு, ஆப் மட்டும் பண்ணிக்கிட்டு இருந்தா, சீக்கிரமே அடிக்கடி windows not responding error மாதிரி சில பிரச்சனை வராம தடுக்கலாம். அதுக்கான சில சிம்பிளான வலைமுறைய அடுத்து பார்க்கலாம்.

#1. முதலில் Windows Key+R Key அழுத்த வேண்டும். அடுத்து Run Box  ஓபன் ஆகும். அந்த RUN Box-ல recent அப்படின்னு டைப் பண்ணி enter பட்டன் அழுத்தணும். அடுத்து recent files ஓபன் ஆகும். அதுல select all கொடுத்துட்டு delete பண்ணிறனும். (win key+R key -> Run -> recent -> delete all)

#2. மறுபடியும் Windows Key+R Key அழுத்தணும். Run Box ஓபன் ஆகும். அதுல %temp% அப்படின்னு டைப் பண்ணி enter பட்டன் அழுத்தணும்.அதுல select all கொடுத்துட்டு delete பண்ணிறனும். (Win key+Rkey -> Run -> %temp% -> Delete all)

#3. அதே போல Windows Key+R Key அழுத்தணும். Run Box ஓபன் ஆகும். அதுல temp அப்படின்னு டைப் பண்ணி enter பட்டன் அழுத்தணும்.அதுல select all கொடுத்துட்டு delete பண்ணிறனும். (Win key+Rkey -> Run -> temp -> Delete all)

#4. தேவை இல்லாத softwares எல்லாத்தையும் அன்-இன்ஸ்டால் பண்ணிறனும். 

#5. அடிக்கடி windows os அப்பறம் Antivirus அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

#6. Desktopல மட்டும் அதிக files வைக்கவே கூடாது. அதுக்குன்னு தனி folder போட்றனும்.

#Computer Speed Up : இதெல்லாம் செஞ்சாலே முன்ன இருந்ததுக்கு உங்க Computer 75 சதவிகிதம் அதிக வேகமா வொர்க் ஆகும். வாரம் ஒருமுறை இத பண்ணா slow ஆகுற பிரச்சனையே இருக்காது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top