#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன்! அது ஜம்பாகி தட்டில் விழுந்தது!!
  • 06:09AM May 25,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 06:09AM May 25,2019 Kodambakkam

கல்லூரி மாணவர்களில் இருவகையான மாணவர்கள் இருப்பார்கள் ஒன்று “day scholar” மற்றொன்று “hostel students”. எல்லா கல்லோரிகளிலும் இந்த day scholar மாணவர்களுக்கு கற்றுத்தரப்படாத ஒரு மிகப்பெரிய வாழ்க்கை பாடம் hostel மாணவர்களுக்கு நமது கல்லூரிகள் கற்றுக்கொடுகின்றனர். அதற்கென தனி வகுப்புகள் கிடையாது, கோச்சிங்க் கிளாஸ்கள் கிடையாது. அனுபவப்பூர்வமாக அந்த திறன்களை கல்லூரிகள் அவர்களுக்கு கற்றுக்கொடுகின்றனர். அது என்னவென்றால் “வாழ்கையில் எந்த சூழ்நிலையிலும் வாழும் தகுதி” தான். இந்த திறன் அவர்களுக்கும் தெரியாமலேயே அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

food cort1.jpg

கல்லூரி மெஸ்களில் சாப்பிட்டு பழகிவிட்டால் அந்த மாணவரால் எதையும் உண்டு வாழும் திறமை அவருக்கு தானாக வந்துவிடும். ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல ஒரு வாரம் கூட குளிக்காமல் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு எப்படி fresh ஆக இருப்பது. தண்ணீரை அதிகம் பயன்படுத்தாமல் சிக்கனமாக பயன்படுத்தி கல்லூரிக்கு ரெடியாவது, அதுவும் அதிகாலை 8.55 மணிக்கு எழுந்து ஒன்பது மணி அளவில் day scholar மாணவர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு வகுப்பில் gun மாதிரி அமர்ந்திருப்பது. ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு இடங்களில் இருக்கும் மாயவித்தை. இப்படி hostel மாணவர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் கற்றுகொள்ளும் வித்தைகள் ஏராளம்.

rmk-canteen.jpg

பெற்றோர்கள் மாணவர்களை கல்லூரி விடுதிகளில் சேர்க்கும் பொழுது அந்த விடுதியின் உணவு எப்படி இருக்கும் என்று பரிசோதிக்க நினைப்பார்கள். ஆகையால் விடுதி மெஸ்களில் மாணவர் சேர்கை நடக்கும் பொழுது மட்டும் சாப்பாடு தரமாக இருக்கும். பெற்றோர்களும் “ஆஹா நமது குழந்தைக்கு நல்ல உணவுகளை கொடுக்கின்றனர்” என்று நினைத்துக் கொள்வார்கள் ஆனால் நாட்கள் ஆக ஆக யானை தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகும் கதை அந்த விடுதி சாப்பாட்டை தொடர்ந்து சாப்பிடும் மாணவர்களுக்கு தான் தெரியும்.

hostel3.jpg

வட நாட்டு மாணவர்கள் அதிகம் நம் தமிழக கல்லோரி விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். சில கல்லூரி விடுதிகளில் தமிழ் மாணவர்களுக்கும் அதிகமான எண்ணிகையில் வட நாட்டு மாணவர்கள் இருப்பார்கள். அந்த விடுதிகளில் எல்லாம் இரவு உணவு என்ன தெரியுமா? “ஒரு முட்டை, மூன்று சப்பாத்தி, பருப்பு தால், நான்கு பிரட் கொஞ்சம் ஜாம்” இதை இரவுகளில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது தமிழக மாணவர்களுக்கு “மலச்சிக்கல்” பிரச்சனை மிக எழிதாக வந்துவிடும். சில கல்லோரிகளில் lunch break வெறும் முக்கால் மணி நேரம் தான் இருக்கும். விடுதி மாணவர்கள் அவர்கள் விடுதிக்கு நடந்து சென்று வரவே இருபது நிமிடம் ஆகிவிடும், மீதம் இருக்கும் அந்த இருபத்தி ஐந்து நிமிடங்களில், Q-வில் நின்று, உணவு வாங்கி, இடம் பிடித்து அமர்ந்து, சுவைக்கும் தன்மை நமது நாவிற்கு இருப்பதையும் மறந்து, அப்பளத்திற்கு சண்டை போட்டு வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு வகுப்பிற்கு சென்றுவிடுவார்கள். இப்படி அவர்கள் விடுதி மெஸ்களில் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்.

Top