#History: இப்படித்தான் ஆரம்பமானது evening college! ருசீகர வரலாறு!!
  • 06:14AM Jun 17,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 06:14AM Jun 17,2019 Kodambakkam

தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் காலை முழுநேர வகுப்பும், மாலை பகுதிநேர வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. வேலை பார்த்துக்கொண்டே மேற்படிப்பைப் படிக்க நினைக்கும் சாதனையாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. கல்லூரிகளில் காலை நேரங்களில் சேர்ந்து படிக்க நேரம் இல்லாதவர்கள் இப்படி பகுதி நேரத்திலும், மாலை நேரத்தில் படித்து வருகின்றனர். எந்த ஒரு ஆரம்பத்திற்குமே ஒரு பிள்ளையார் சுழி நிச்சையம் இருக்கும். அதன் பின்னே ஒரு சுவாரஸ்யமான வரலாறும் இருக்கும். இந்த மாலை கல்லூரி (evening college) தமிழகத்தில் முதல் முறை ஆரம்பமானதற்கு பின்னே ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

12.jpeg

கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது அவருடைய நண்பர் ஒருவர் காமராஜரை சந்திக்க வந்திருந்தார். என்ன விஷயம் என்று காமராஜர் கேட்க, “ஏன் பையனுக்கு மாநில கல்லூரியில B.Sc., சீட் வேணும்” என்று தயங்கிக் கொண்டே கேட்டாராம் அந்த நண்பர். அதற்கு காமராஜர், “un பையனுக்கு சீட் வாங்கி தரவா நா இந்த பதவிக்கு வந்தே?” என்று கேட்டாராம். அதற்கு அந்த நண்பர் “வெறும் பதினஞ்சி சீட் தானாம்! கெடைக்குமான்னு தெரியல” என்று புலம்பிக்கொண்டே நடையை கட்ட. “இரு இரு என்ன சொன்ன? வெறும் பதினஞ்சி சீட் தானா? ஏன் இவ்வளவு குறைவான இடங்கள்? அந்த பிரின்சிபால்க்கு ஃபோனப்போடு” என்றாராம் காமராஜர்.

12.jpeg

காமராஜரிடம் கல்லூரி முதல்வர் வெறும் பதினைந்து இடங்களை தான் பல்கலைக்கழகம் அனுமத்திப்பதாக சொல்ல, உடனே கல்வித்துறை மந்திரிக்கு பறந்தது அடுத்த phone call. “ஏன் வெறும் பதினஞ்சி சீட்? மத்த குழந்தைங்களும் படிக்க வேண்டாமா? நாடு எப்படி முன்னேறும், படிச்சாதானே முன்னேறும்! இத கூட்ட முடியாதா?” என்று கல்வித்துறை மந்திரியிடம் கேட்டாராம் காமராஜர். அதற்கு அவர், “ஐயா, அந்த பதினஞ்சி மாணவர்களுக்கு தான் லேப் வசதி உண்டு, மேற்கொண்டு சேர்த்தா வசதி படாதே” என்று சொன்னாராம்.

kamarajar.jpg

அதற்கு காமராஜர், “உங்க வீட்டுல பதினஞ்சி பேருக்கு சாப்பிட மட்டுமே பாத்திரம் இருக்கு, ஆனா முப்பது பேர் வந்துட்டாங்க. அப்போ என்ன செய்வீங்க?” என்று கேட்டாராம். “முதல் பதினஞ்சி பேர் சாப்பிட்டதும், அந்த பாத்திரத்த கழுவிட்டு அடுத்த பதினஞ்சி பேருக்கு சாப்பாடு போடுவோம்” என்றாராம் கல்வித்துறை மந்திரி. காமராஜர், “அதே மாதிரி இங்கையும் காலை மாலைன்னு ரெண்டு ஷிப்ட் போடுங்க, இன்னும் பதினஞ்சி பட்டதாரிகள் உருவாகட்டும்” என்று சொன்னாராம்.

201807140848356020_Kamarajar-Birthday-celebrate-Education-development-day_SECVPF.gif

உடனே கல்வித்துறை மந்திரி, “எங்களுக்கு இந்த யோசனை வரலிங்கையா! உடனே இந்த திட்டத்த அமல்ப்படுத்துவோம்” என்று சொன்னாராம். உடனே நண்பரை பார்த்து காமராஜர் “இப்போ முப்பது சீட் இருக்குது, உன் மகனுக்கு தகுதி இருந்தா கிடைக்கும் போ!” என்று சொன்னாராம். இப்படி வந்தது தாங்க evening college.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top