HIGGINBOTHAM’S - சென்னையில் உள்ள இந்தியாவின் முதல் புத்தகக்கடை
  • 06:17AM Mar 13,2018 Mount Road Bus Stop, Anna Salai, Chennai, Tamil Nadu, India
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 06:17AM Mar 13,2018 Mount Road Bus Stop, Anna Salai, Chennai, Tamil Nadu, India

இந்தியாவின் முதல் புத்தகக்கடையாகவும் மற்றும் இந்தியாவிலேயே இன்றும் இயங்கி வரும் ஒரு பழமையான புத்தகக்கடையாகவும் இருப்பது இந்த “HIGGINBOTHAM’S”. சென்னை மவுண்ட் ரோட்டில் இருக்கும் அனைத்து மார்டன் கட்டிடங்களுக்கும் சவால் விட்டுக்கொண்டு கம்பீரமாக இன்றும் நின்றுகொண்டு இருக்கின்றது “ஹிக்கின்பாதம்ஸ்”. என்னதான் சென்னையின் அதிவேக வளர்ச்சியில் வளர்ந்து நிற்கும் பிரம்மாண்ட கட்டிடங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாலும் இந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடைக்குள் நாம் நுழையும் பொழுது மீண்டும் நாம் மதராசப்பட்டினத்திற்குள் நுழைந்தது போலத்தான் இருக்கின்றது.

higgin.jpg

ABEL JOSHUA HIGGINBOTHAM எனும் இங்கிலீஷ் லைப்ரரியன் 1840 ஆம் ஆண்டு சென்னை வந்தடைந்தார். அவர் வேலை செய்து கொண்டிருந்த லைப்ரரியின் பிசினஸ் முழுவதுமாக தோழ்வியை தழுவ, அன்றைய மதராசப்பட்டினத்தில் மவுண்ட் ரோட்டில் ஜோஷ்வா ஹிக்கின்பாதம் சொந்தமாக 1844 லில் உருவாக்கியதுதான் ஹிக்கின்பாதம்’ஸ் புத்தகக்கடை. மிக தரமான புத்தகங்களை சரியான விலையில் விற்றபடியால் இந்த கடை மிக விரைவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 1859 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க LORD MACAULAY வுக்காக LORD TREVELYAN எழுதிய கடிதத்தில், இந்த மதராசப்பட்டினத்தில் அவர் ஹிக்கின்பாதம்ஸ் எனும் ஒரு அருமையான புத்தகக்கடையை கண்டுபிடித்திருப்பதாகவும், அங்கு இருக்கும் புத்தகங்கள் அவரை மிகவும் கவர்ந்ததாகவும், எண்ணற்ற பிரெஞ்சு நாவல்களையும், அறிய காவியங்களையும் இந்த ஹிக்கின்பாதம்ஸ் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FS_055459102A10060951-ft3.jpg

ஹிக்கின்பாதம்ஸ் 1860 களில் இந்தியாவில் அதிலும் சென்னையில் தனது முதல் STATIONERY பொருட்களையும் மற்றும் தனது முதல் PRINTED புத்தகங்களையும் விற்பனையில் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. ஹிக்கின்பாதம்ஸ் 1990 வரையிலும் இந்தியாவின் அதிக கிளைகளைக் கொண்ட புத்தகக்கடையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 1989 ஆம் ஆண்டுதான் சென்னை மவுண்ட் ரோடில் இருக்கும் தனது முதல் கடையை புதிப்பித்தது ஹிக்கின்பாதம்ஸ். இன்று SOUTH INDIA வில் தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டும் மொத்தம் இருபத்தி இரண்டு கிளைகளைக் ஹிக்கின்பாதம்ஸ் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

_RSK6771a-kVAH--621x414@LiveMint.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top