#Sugarcane: ஃபர்ஸ்ட்டு ஜூஸு!! ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸில் ஒளிந்திருக்கும் ஐட்டங்கள்!!!
  • 11:08AM Oct 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:08AM Oct 09,2019 Kodambakkam

முன்னொரு காலத்தில் கோடை காலம் என்றாலே இளைஞர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது கரும்பு ஜூஸ் தான். அடித்து கொழுத்தும் வெயிலை சமாளிக்க கரும்பு ஜூஸ் ஒரு முக்கிய பானமாக இருந்த காலம் அது. குடிக்க குடிக்க இன்னொரு கிளாஸ் கொடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும் ஒரு இயற்கை பானம். ஆனால் இந்த கால இளைஞர்கள் கரும்பு ஜூஸ் இலவசமாக கிடைத்தாலும் அதை வாங்கி பருக வேண்டும் என்று நினைப்பது இல்லை. கோடை கால சிறப்பு பானமாக இருந்த கரும்பு ஜூஸ் தற்பொழுது out of fashion-னாக மாறிவிட்டது. கேட்டாலும் கிடைக்காத கேழ்வரகின் நிலைமைதான் இன்று கரும்புகளுக்கு வந்துள்ளது. கரும்பு ஜூஸ் எவ்வளவு சுவையாக இருக்குமோ அதே அளவு மருத்துவ குணத்திலும் சிறந்து விளங்குகின்றது. இதன் உண்மையான நற்குணங்களை அறிந்திட இந்த பதிவை மேலும் தொடருங்கள்.

3.jpg

#1. கரும்பு ஜூஸ் தனித்தன்மை மிக்க சுவையுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸில் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும். எனவே இது நீரிழப்புக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். இது சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

#2. சிறுநீரக தொற்றுகள் சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது இந்த கரும்பு ஜூஸ்.

#3. ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த இந்த கரும்பு ஜூசை சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டையும், பித்தத்தையும் குறிக்க முடியும்.

#4. உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது கரும்பு ஜூஸ். தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப் படுத்துவதற்கும் உதவுகிறது.

#5. இந்த கரும்பு ஜூஸ் உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தினமும் ஜாகிங்க் போகும் நபர்கள் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடிக்கலாம். உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறதாம் இந்த கரும்பு ஜூஸ்.

#6. செரிமான பிரச்சனை மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் கரும்பு ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். கரும்பு ஜூஸில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது.

#7. வாய் துர்நாற்றம் இருந்தால் நண்பர்கள் கூட நம்முடன் தொடர்ந்து பேச யோசிப்பார்கள். கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள் மனவிட்டு கழுவி ஊற்றுவார்கள். உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் கரும்பு ஜூசை ஒரு தீர்வு தரும் பானமாக கருதி அருந்த வேண்டும்.

#Sugarcane - கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கஹஸ இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது. ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாக்கிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top