#Lip2Lip: ஐந்து நிமிடம் இதை தொடர்ந்து செய்வதனால் கிடைக்கப்பெறும் அட்டகாசமான நன்மைகள்!!!
  • 12:12PM Oct 05,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:12PM Oct 05,2019 Kodambakkam

தாம்பத்ய வாழ்கையின் ஒரு முக்கியமான எனர்ஜெடிக் பூஸ்டர் என்னவென்றால் அது அன்பானவரிடத்தில் இருந்து கிடைக்கப்படும் அந்த உணர்வுமிக்க முத்தம் தான். முத்தத்தில் பல வகைகள் உண்டு, குறிப்பாக காதலியிடமிருந்து கிடைக்கப்படும் அந்த லிப் டு லிப் முத்தத்தின் வலிமை இருக்கிறதே, காதலனை எதையும் சாதிக்க செய்யும் ஆற்றலை வழங்கக்கூடியது. புத்துணர்ச்சியைக் கொடுக்கும் இந்த லிப் டு லிப் முத்தம் பல விதங்களில் நமக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றது. ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம் தினமும் ஐந்து நிமிட லிப் டு லிப் முத்தம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றதாம். எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

1.jpg

#1. முத்தத்தால் இதய ஆரோக்கியம் இயற்கையாகவே மேம்படுமாம். முத்தம் கொடுக்கும் போது உணர்வுகள் தூண்டப்படுகிறது. மேலும் முத்தம் கொடுக்கும் பொழுது கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைந்து ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

#2. ஐந்து நிமிடம் தொடர்ந்து முத்தம் கொடுப்பதால் கர்ப்பிணிப் பெண்களின் குறைபாடுகள் நீங்குவதாக சிலர் கூறுகின்றனர். காரணம் இந்த முத்தம் அவர்களது மன அழுத்தத்தை குறைக்கின்றதாம். உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றதாம். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

#3. முத்தம் கொடுத்த பின் நாம் வேகமாக சுவாசிப்பது இயல்பு. அப்படி சுவாசிக்கும் பொழுது நமது நுரையீரல் சுத்தமாவதுடன், சுவாசப்பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது. மேலும் தினமும் காலையில் லிப் டு லிப் முத்தம் கொடுத்தால் வாழ்நாள் நீடிப்பதாக ஒரு ஆய்வு சொல்லுகின்றது.

#4. முத்தம் கொடுக்கும் போது உடலில் ஒர் அட்ரினலின் வெளியீடு ஊக்குவிக்கப்படும். இதனால் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து மிகவும் உற்சாகமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க செய்யும்.

#Lip2Lip - முத்தம் நம்மை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகின்றது. அன்பான முத்தத்திற்கு ஓர் காந்த சக்தி இருக்கிறது அதனால் தான் நாம் அதற்காக ஏங்கித்தவிக்கின்றோம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top