இந்திய அணியில் இருந்து தூக்கப்படுகிறாரா ஹர்திக் பாண்டியா..? பிசிசிஐ விடுத்த பகிரங்கமாக அறிவிப்பு..!
  • 12:12PM Jan 11,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:12PM Jan 11,2019 India

your image

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹர்திக்பாண்டிய இந்திய அணியில் சில போட்டிகளில் இருந்து விளக்கி வைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட தொலைகாட்சி நிகழ்ச்சியில் பெண்களின் அந்தரங்கம் குறித்து அவதூறாக பேசியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்டார் நெட்வொர்க்கின் காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஹர்திக் பாண்டியா பெண்கள் தொடர்பான பாலியல் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். பாண்டியாவின் கருத்திற்குப் பல விமர்சன ஏவுகணைகள் வெடித்து சிதறின.

இதற்கு பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டத்திற்கு, தனது கருத்துக்கு ஹர்திக் பாண்டியா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள பதிவில்,”எந்த உள்நோக்கத்துடனும் யாரையும் காயப்படுத்தவில்லை.எந்த விதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

your image

எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ள போதிலும், அவர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுலும் பாண்டியாவுடன் பங்கேற்றார்.

இந்த விவகாரம் குறித்து பி.சி.சி.ஐ-க்கு விளக்கம் அளித்துள்ள ஹர்திக் பாண்டிய, தான் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினேனே தவிர வேறு எந்த நோக்கத்திலும் பேசவில்லை என்று கூறினார். ஆனால் பாண்டியாவின் விளக்கம் பி.சி.சி.ஐ தரப்புக்கு திருப்தியை அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஹர்திக்பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கலாம் என்று பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் பங்கேற்ற ராகுலுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top