கெளதம் மேனனுடன் முதல் முறை இணையும் ராக்ஸ்டார் அனிருத்! விவரம் உள்ளே...
  • 00:15AM Apr 13,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 00:15AM Apr 13,2019 Kodambakkam

தமிழ் சினிமாவில் மாறுபட்ட உணர்வுபூர்வமான படங்களை கொடுப்பவர் இயக்குனர் திரு.கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள். நடிகர் விக்ரம் அவர்களை வைத்து “துருவநட்சத்திரம்” என்ற படத்தையும், நடிகர் தனுஷ் நடிப்பில் “எனை நோக்கி பாயும் தோட்டா” என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார் அவர். இரண்டு வெளியாக காத்திருக்கும் நிலையில் சில படங்களில் நடிக்கவும், வசனம் எழுதுவதுமாக இருக்கிறார் கெளதம் அவர்கள்.

29243930_1658781064187741_5290551680264306688_n.jpg

அவர் இயக்கிய “நடுநிசி நாய்கள்” படத்தில் ANTI-HEROவாக நடித்திருந்தார் நடிகர் வீரா அவர்கள். தற்பொழுது அவர் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படமான “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இளம் இயக்குனர் திரு.அவினாஷ் அவர்கள். இந்த படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் திரு.மகேஷ் கோவிந்தராஜ்.

IMG-20180811-WA0252.jpg

“குக்கூ” பட நாயகி மாளவிகா கதாநாயகியாகவும், பிரபல தமிழ் நடிகர் பசுபதி அவர்களும் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் Madley Blues. இந்த படத்தின் ட்ரைலரை நாளை இயக்குனர் கெளதம் மற்றும் ராக்ஸ்டார் அனிருத் இருவரும் இணைந்து நாளை வெளியிடுகின்றனர்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top