அயன் பட பாணியில் விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயற்சி
  • 19:01PM Feb 08,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 19:01PM Feb 08,2019 Chennai

சூர்யா நடித்த அயன் படத்தில் வெளிநாட்டில் இருந்து பொருட்களை எவ்வாறு கடத்துவார்கள் என்று தத்ரூபமாகப் படம்பிடித்திருப்பார்கள்.தற்போது அயன் நடந்தது போலவே சென்னை விமான நிலையத்தில் இதே போன்ற முறையில் தங்கத்தைக் கடத்தும் முயற்சி நடந்துள்ளது.

Image result for Chennai airport
மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான வருகை பகுதியில் உள்ள கழிவறையைச் சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்ற போது தொட்டியில் ஒரு பார்சலை பார்த்துள்ளனர்.இதை தொடர்ந்து அதிகாரிகளிடம் தகவல் தெருவித்தனார்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் விசாரித்த போது அந்தப் பார்சலில் 34 லட்சம் ரூபாய் கிலோ தங்க கட்டிகள் இருந்துள்ளது.

Image result for Chennai airport smuggling
தங்கக்கட்டிகள் எப்படி வந்தது என்ற விசாரணையில் ஈடுபட்ட போது, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது இந்தர்பால் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.இந்தர்பால் துபாயில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top