'ஆபரேஷன் விஜய்'.. கோவாவில் நடந்தது என்ன..? இது என்ஜாய்மென்ட் இல்லங்க எக்ஸ்சைட்மென்ட்..!
  • 13:49PM Dec 19,2018 Goa
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:49PM Dec 19,2018 Goa

your image

 

 

1961 ஆம் ஆண்டு நான்கரை நூற்றாண்டுகளாகப் போர்ச்சு கீசியர்களின் ஆட்சியின் கீழிருந்த கோவா, ஆப்பரேஷன் விஜய் என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

போர்ச்சுகீசியக் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவேண்டும் என்று 1950இல் இந்தியா கேட்டுக்கொண்டபோது, அவை குடியேற்றப்பகுதிகள் அல்ல என்றும், போர்ச்சுகல் நாட்டின் பகுதிகள் என்றும் கூறிய போர்ச்சுகல், தாங்கள் வந்தபோது இந்தியக் குடியரசு என்பதே இல்லை என்பதால், கேட்பதற்கு இந்தியாவிற்கு உரிமையே இல்லை என்று கூறிவிட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியா தனது தூதரை லிஸ்பனிலிருந்து விலக்கிக்கொண்டதுடன், கோவா-இந்தியா இடையே சென்றுவர விசா கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்திய விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, கோவா தேசிய உணர்வின் தந்தை என்று அழைக்கப்படும் ட்ரிஸ்டாவ் ப்ரகன்ஸா குன்ஹா, 1928இல் கோவா விடுதலை இயக்கத்தைத் தொடங்கியிருந்தார்.

ஆயுதமேந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள், படைகள் இல்லாமல் காவல்துறை மட்டுமிருந்த தாத்ரா, நாகர் ஹவேலி ஆகியவற்றை 1954இல் கைப்பற்றிவிட்டனர். 1955இல் ஆயுதமின்றி அமைதியான முறையில் கோவாவுக்குள் நுழைய முயன்ற சுமார் 5,000 விடுதலைப் போராட்டக்காரர்களைப் போர்ச்சுகீசியக் காவல்துறை சுட்டதில் 30 பேர் பலியானதைத்தொடர்ந்து, கோவாவிலிருந்த தூதரகத்தை இந்தியா மூடியது.

இதுவும், 1961 நவம்பரில், போர்ச்சுகீசியப் பகுதி வழியாகச் சென்ற பயணிகள் படகை போர்ச்சுகீசியர்கள் தாக்கியதில் ஒருவர் இறந்ததும், இந்திய மக்களை ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக்கியது.

டிசம்பர் 11இல் பனாஜி, மர்மகோவா பகுதிகளுக்குள் நுழைந்த இந்திய ராணுவம் 18, 19 தேதிகளில் கோவா, டாமன், டையூ பகுதிகளில் தரை, வான், கப்பற்படைத் தாக்குதல்களை நடத்தியபின், 4,668 போர்ச்சுகீசிய வீரர்கள் சரணடைந்ததுடன், 451 ஆண்டு போர்ச்சுகீசிய ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்தியத் தரப்பில் 22, போர்ச்சுகீசியத் தரப்பில் 30 வீரர்கள் பலியாகினர். கோவா மீட்கப்பட்டதை சோவியத் ஒன்றியம், அரேபிய நாடுகள் முதலானவை வரவேற்றதும், அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top