#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க! அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்!!
  • 15:52PM Jul 10,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:52PM Jul 10,2019 Kodambakkam

இது ஒரு சினிமா வசனம் “என்ன கொடுக்குறோம்ங்கறது முக்கியம் இல்ல! கொடுக்கறது தான் முக்கியம்”. உங்கள் மனம் கவர்ந்த வாழ்க்கை துணைக்கு நீங்கள் இப்படி நினைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கி அன்பு பரிசாக கொடுத்திடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டு கண்ட பரிசுகளையும் வாங்கி கொடுத்தால் பல உள்காயங்களை பரிசாக பெற வேண்டி இருக்கும். அன்பான காதலிக்கோ அல்லது ஆசை மனைவிக்கோ நாம் எப்படிப்பட்ட பரிசுகளை கொடுக்க கூடாது என்று முதலில் தெரிந்து கொள்வோம், அப்போதுதான் எந்த பரிசை கொடுக்கலாம் என்ற முடிவிற்கு நாம் வரமுடியும். நமது அன்பானவர்கள் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது குறைவு தான் என்றாலும் அதை நிறைவாக செய்வது நமது கடமை அல்லவா?  

#1. கிப்ட் வாங்க கடைக்கு சென்றதும் பெரும்பாலானவர்களுக்கு முதலில் கண்களில் படுவது ஃபோட்டோ ஃபிரேம்கள் தான். அது நனது தவறல்ல. பெரும்பாலான கடைகளில் அதை மட்டும் தான் அதிகமாக வைத்துள்ளனர். இந்த ஃபோட்டோ ஃபிரேம்கள் பரிசாக கொடுப்பது ஒரு நல்ல ஐடியா தான் ஆனால் அடிக்கடி கொடுக்க கூடாது, அதே போல உங்கள் அன்பானவருக்கு இந்த கிப்ட்டை கொடுக்கும் பொழுது நீங்கள் இருவரும் அல்லது அவர் மட்டும் இருக்கும் சிறந்த படங்களை வைத்து கொடுங்கள், மாற்றி உங்கள் படங்கள் அதிகமாகவோ அல்லது உங்கள் படங்களை மட்டுமே கொண்ட ஃபிரேம்களை பரிசாக கொடுக்க கூடாது.

#2. உங்கள் மனைவிக்கு அல்லது காதலிக்கு புதிய வாசனை திரவியங்களை பரிசாக கொடுக்க வேண்டாம். காரணம் இதுவரை அவருக்கு பிடித்தமான ஒன்றை பயன்படுத்தி வந்திருப்பார். நீங்கள் கொடுத்த புதிய வாசனை திரவியத்தால், இத்தனை நாள் அவர் பயன்படுத்தியது உங்களுக்கு பிடிக்காமல் இருந்திருப்பதாக நினைத்துகொள்வார். அல்லது நீங்கள் கொடுக்கும் புதிய வாசனை திரவியம் அவருக்கு பிடிக்காமல் போகலாம்.

#3. நீங்கள் கொடுக்கும் அன்பு பரிசு உங்கள் அன்பிற்குரியவருக்கு ஏற்றது போலவும், பயன்படுவது போலவும் இருக்க வேண்டும், மாறாக உங்களுக்கு பயன்படுவது மாதிரியான பரிசுகளை அவர்களுக்கு கொடுக்க கூடாது.

#4. பெரும்பாலான கணவன்கள் குழந்தை பிறந்ததும் மனைவியை கண்டுகொள்ள மாட்டார்கள், குழந்தைகளுக்காக வாழ தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கும் கணவன்மார்கள் மனைவிக்கு கொடுக்கும் பரிசுகள் கூட குழந்தைக்கும் ஏற்றது போல அமைந்துவிடும். இப்படியான தவறையும் செய்துவிடாதீர்கள்.  மேலும் உங்கள் அன்பான மனைவிக்கு ரூபாய்நோட்டுகளை பரிசாக கொடுக்க கூடாது. அது உங்கள் மீதிருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிவிடும்.

#5. முக்கியமான ஒன்று நீங்கள் கொடுக்கும் அன்பு பரிசுகளில் இருக்கும் வாக்கியங்களிலோ, பெயர்களிலோ எழுத்து பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியான பரிசுகளை பார்கையில் நம் மீது அவர்களுக்கு வெறுப்பு தான் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

#Wrong Gifts இப்போது சொல்லுங்கள் இப்படியான கிப்ட்களை நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைக்கு கொடுத்தால் சொம்பு நெளிந்து போகுமா? போகாதா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top