எவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா?... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..!
  • 12:17PM May 24,2019 Chennai
  • Written By Charulatha
  • Written By Charulatha
  • 12:17PM May 24,2019 Chennai

பொண்ணுங்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் ஒரு ஆசை இருக்கு,எவ்வளோ வயசானாலும் இளமையா அழகா இருக்கனும்.இதுக்காக நிறைய மருந்து எடுத்துக்குங்க,10 வருசத்துக்கு அப்பறோம் அழகா இருக்கறதுக்கு இப்பொழுதுள்ள இருந்தே உடம்பப் பாத்துக்குங்க.ஆனால் அவங்க இவ்ளோ கஷ்டப்பட்டுச் சாப்பாடு விஷயத்துல விட்ருவாங்க.அப்படி நம்ம கவனத்தை மீறி சாப்பிடற சில உணவு வகைகள்..

Image result for aging skins

#1. வெளிநாடுகளில் மட்டுமே அதிகமான சாப்பிட்டிவந்த டோனட் இப்போ இந்தியாவிலும் பிரபலமாயிடுச்சு.டோனட் அப்பறோம் சாக்ரையால் செய்யப்பட்ட உணவுகள் அனைத்துமே சருமத்திற்கு மிகப் பெரிய எதிரிகள்,உங்களைச் சீக்கிரமா முதிர்ச்சி அடைய வைத்திடும்.

#2. சுத்திகரிக்கப்பட்ட வெஜிடபிள் ஆயில், சோயாபீன் ஆயில் இன்று அதிக அளவில் உணவில் சேர்க்கப்படுகிறது.இது நம்முடைய சருமத்தில் உள்ள செல்களின் திசுக்களைப் பாதித்து முதிர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும்.

#3. இன்று Fast Food உணவுகளின் ஆதிக்கம் அதிகளவு உள்ளது.எப்பொழுதாவது இது போன்ற உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை,ஆனால் அடிக்கடி சாப்பிட்டால் இளம் வயதிலேயே உங்களைக் கிழவனாக மாற்றிவிடும்.

#4. உப்பை தேவையான அளவு எடுத்துக்கொள்வதில்லை தப்பில்லை.ஆனால் சில தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்வார்கள்.உப்பை அதிகமாக எடுத்து கொள்வதால் ரத்தத்தின் நீர்மத் தன்மையைக் குறைத்து விடும்.இதனால் சருமத்திற்குக் கிடைக்க வேண்டிய ரத்தஓட்டம் பாதிப்புக்குள் ஆகும்.சீரான ரத்த ஓட்டம் இல்லாத உடல் எப்படி இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.

#5. சிலருக்கு அதிகக் காரம் எடுத்துக்கொள்வது ரொம்பப் பிடிக்கும்.இது உங்களின் குடலை தாண்டி சருமத்தையும் வேகமாகப் பாதிக்கும்.காரமான உணவுகள் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்,அது சருமத்தை வறட்சி அடைய வைப்பதோடு இளமையிலேயே முதிர்ந்த தோற்றத்தை கொடுத்துவிடும்.

எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாத வேலைகளைச் செய்வதை விட்டுவிட்டு அளவான உணவு அதற்கேற்ப உடற்பயிற்சி என மன நிறைவோடு இருந்தால் உடல் அளவு மட்டுமின்றி மனதளவிலும் இளமையாக இருப்பீர்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top