Far Cry – 5
  • 06:59AM Nov 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:59AM Nov 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்தப் பேரைப் படிச்சவுடனே நீங்க ரெகுலரா வீடியோ கேம் விளையாடுறவங்களா இருந்தா கண்டிப்பா ரிலீஸ் டேட் சொல்லிடுவீங்க… அந்தளவுக்கு இந்த விளையாட்டு, வீடியோ கேம் விளையாடறவங்களோட பேவரைட்னு கூடச் சொல்லலாம். வழக்கமா எல்லா நல்ல வீடியோ கேம்க்கு பின்னாடி இருக்கிற Ubisoft தான் இந்த கேமையும் நமக்காகக் கொண்டு வந்திருக்காங்க.  ஒரே ஒரு சின்ன திருத்தம், இந்த கேமை முதல்ல தயார் பண்ணினவங்க இவங்க இல்லை.  க்ரேடெக்-ங்கிற கம்பெனி அவங்களோட க்ரைஇன்ஜின்-கிற மென்பொருளை சோதிக்க இந்த விளையாட்டை உருவாக்கினாங்க.  விளையாட்டோட சுவாரஸ்யம் ரொம்ப சீக்கிரம் பெரிய வரவேற்பை கொடுக்க, Ubisoft உடனடியா அவங்ககிட்டயிருந்து எல்லா உரிமைகளையும் வாங்கிட்டாங்க.

அப்புறம் என்ன, விடாம நாலு வெர்ஷன் சக்க போடு போட, இப்போ அஞ்சாவதா Far Cry 5 ன்னு இந்த விளையாட்டை லாஞ்ச் பண்ணியிருக்காங்க.  இந்த கேமை ரொம்ப எதிர்பார்க்கிறதுக்குக் காரணம் ஒவ்வொரு முறையும் வெவ்வேற கதைக்களம். ப்ரைமல்-ங்கிற இவங்க போன பாகம் கற்கால மனிதர்களை சுத்தி அமைஞ்சதோட அந்த காலகட்டத்தில இருந்த மாமத்ங்கிற பெரிய யானை மாதிரியான விலங்குகளையும் காமிச்சிருந்தாங்க.  அதெல்லாம் சேர்ந்து இப்போ என்னன்னு எல்லாரும் ஆவலோட காத்திட்டிருக்காங்க.

இந்தக் கதை என்னன்னா உலகத்தையே அழிக்கனும்னு திட்டமிட்டுட்டு இருக்கிற ஒரு கும்பல் மான்டெனா ங்கிற ஊரில இருக்கிற மக்களோட சுதந்திரத்தைப் பறிச்சுடறாங்க.  நம்மோட வேலை வில்லன் ஜோசப் ஸீட் அப்புறம் ஹெரால்ட் இவங்களை எதிர்த்து நின்னு, இவங்களுக்கு எதிரா மக்களை ஒண்ணு திரட்டி அவங்களை ஒழிக்கிறதுதான். நடுவுல நெறய்ய சண்டை, துப்பாக்கி, வெடிகுண்டு.  இதுல சுவாரஸ்யமான விஷயம் கூட வர்ற நாய் உட்பட மத்த கேரக்டர்கள்தான்.

ரொம்பவே ரியலான கிராபிக்ஸ் நாம நிஜமாவே ரோட்டிலதான் நின்னுட்டிருக்கோமான்னு நினைக்க வைக்குது.  Far Cry நிறுவனமோ இதுவரைக்கும் பார்த்திருக்க முடியாத அளவுக்கு மோசமான எதிரிகளை நீங்க இதுல பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்க. எதுனாலும் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த கேம் 2018 பிப்ரவரி 27 ந் தேதி ரிலீஸ் ஆகும்னு சொல்லியிருக்காங்க…

அதுவரைக்கும். Far Cry 4 Primal விளையாடினது இல்லைன்னா, விளையாடி ட்ரெய்னிங் எடுத்துக்கோங்க… ஹேப்பி கேமிங்…     

Top