#Exam 2020: ப்ளஸ் 2 முடித்த பிறகு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க எந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்? தெரிந்து கொள்ளலாம் வாங்க!!!
  • 14:16PM Apr 15,2020 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 14:16PM Apr 15,2020 Kodambakkam

டொனேஷன் என்ற வார்த்தை இன்று இயல்பான ஒரு வார்த்தையாகிவிட்டது. குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இன்று நல்ல கல்லூரிகளில் படிக்கின்றனர் என்றால் அதற்கு முழு முதல் காரணம் டொனேஷன் தான். இந்த வார்த்தை சாதாரணமான மாணவனுக்கு “நுழைவுத் தேர்வு” என்று ஒன்று உள்ளது என்பதையே மறக்கடித்துவிட்டது என்று தான் கூறவேண்டும். பணம் பத்தும் செய்யும் என்பார்கள் அந்த பத்தில் ஒன்று இன்று கல்வியாகிவிட்டது என்பதுதான் உண்மை. உங்களது பப்ளிக் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் இந்திய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் உங்களது திறமையைக் காண்பித்தால் கண்டிப்பாக நீங்கள் நினைக்கும் படிப்பை அதிகப்படியான டொனேஷன் இல்லாமல் படிக்கலாம். வெளி மாநில மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுகளை எழுதி தமிழக கல்லூரிகளில் படிக்கும் போது நாம் ஏன் அதிகப்படியான டொனேஷன் கட்டி படிக்க வேண்டும்? எந்த துறையைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் எந்த நுழைவுத்தேர்வை எழுத வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம்.

2a.jpg

#1. NEET 2020, நாம் அனைவர்க்கும் நன்றாக தெரிந்த நுழைவுத் தேர்வு தான், மருத்துவம் படிக்க வரும் “மே” மாதம் நடக்க இருக்கும் NEET நுழைவுத் தேர்விற்கு டிசம்பர் இரண்டாம் தேதியில் இருந்தே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

#2. பொறியியல் துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க JEE, JEE Main & Advanced என்ற தேர்வுகளை எழுதலாம். வரும் ஜனவரி, ஏப்ரல் மற்றும் மே மதங்களில் இதற்கான தேர்வுகள் நடக்க இருக்கிறது. நல்ல மதிப்பெண்களை எடுத்தால் IIT மற்றும் NIT கல்லூரிகளில் சேரலாம். மேலும் BITSAT, VITEEE, MET போன்ற தேர்வுகளையும் முயற்சிக்கலாம்.

#3. ஃபேஷன் டிஸைன் படிக்க ஆர்வமிக்க மாணவர்கள் NATA, NIFT Exam, NID DAT, AIEED ஆகிய நுழைவுத்தேர்வுகளை எழுதலாம். வரும் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதற்கான தேர்வுகள் நடக்க இருக்கின்றன.

#4. Agri படிக்க நினைக்கும் மாணவர்கள் வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் Indian Council of Agricultural Research All India Entrance என்ற நுழைவுத் தேர்விற்கு தயாராகுங்கள்.

#5. சட்டம் படிக்க நினைக்கும் மாணவர்கள் Common Law Admission Test மற்றும் All India Law Entrance Test என்ற நுழைவுத் தேர்வை எழுதலாம் இந்த தேர்வுகள் வரும் மே மாதம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.  

#6. Defence துறையைத் தேர்ந்தெடுக்க நினைக்கும் மாணவர்கள் வரும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் நடக்க இருக்கும் National Defence Academy மற்றும் Indian Maritime University Common Entrance Test போன்ற தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.

#7. Hotel Management படைப்பிற்கு All India Hotel Management Entrance Test என்ற NCHMCT JEE நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது.

#8. கணிதம் சார்ந்த படிப்பை தேர்ந்தெடுக்க வரும் மே மாதம் நடக்க இருக்கும் ISI Admission Test என்ற நுழைவுத் தேர்வில் கவனம் செலுத்துங்கள். நல்ல மதிப்பெண்களை எடுத்தால் Indian Statistical Institute எனும் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

#Exam 2020 – இந்த குறிப்பிட்ட தேர்வுகளில் உங்களது மதிப்பெண்கள் மிகவும் முக்கியமானது. காரணம் இந்திய அளவில் எண்ணிலடங்காத மாணவர்கள் உங்களுடன் போட்டிப்போடுவது தான்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top