#English : ச்சே.! இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி.? ஜுஜுபி மேட்டர் பாருங்க .!
  • 23:09PM May 22,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 23:09PM May 22,2019 India

இருக்கும் மொழிகளிலேயே மிக சுலபமாக சீக்கிரம் கற்றுக்கொள்ள கூடிய மொழி ஆங்கிலமாகத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் நன்றாக பேச வேண்டும் என்றால் முதலில் அது நாம படிக்கிற மாதிரி அறிவியலோ அல்லது அறிவோ கிடையாதுனு நம்ம மூளைய நம்ப வைக்கணும். அது வெறும் ஒரு மொழி மட்டுமேனு திரும்ப திரும்ப நினைவுக்கு வரணும். அடுத்து ஆங்கிலத்தில் பேசக்கற்றுக்கொள்ளும் போது , நாம பேச வர விஷயம் தப்பவே இருந்தாலும், எந்த கூச்சமும் இல்லாம தெரிந்தத பேச முயற்சிக்கணும். ஒருவேள தவறாக பேசினாலும் அதுக்காக  வருந்தவோ , யாராச்சும் ஏதாவது சொல்லிருவாங்களோனு வெட்கப்பட கூடாது. ஆங்கிலம் ஒன்னும் நமக்கு தாய்மொழி இல்ல. பயப்படாம ஈஸியா காத்துக்கலாம். பல மொழி சரளம பேசுற சிலர் எப்படி அவங்கலாள பேச முடிஞ்சுனு சில விசயங்கள் சொல்லியிருக்காங்க. அத அடுத்து பாக்கலாம்.

#1. மொழியை முறையாக கற்பது அவசியம். ஆங்கிலம் அனைத்து பள்ளிகளிலும் முறையாக கற்பிக்க படுவதால் இலக்கணம் வாக்கியம் அமைத்தல் போன்ற சில நுணுக்கங்களை எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

#2. அந்த மொழி சார்ந்த புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிப்பதின் மூலம் எழுத்து சார்ந்த நுட்பங்களை தெரிந்து கொள்ளலாம்.

#3. ஆங்கில இசை, திரைப்படங்கள் கேட்பது பார்ப்பது மட்டுமின்றி அதில் வரும் பாடல் வரிகள் / திரைப்பட வசனங்களை அதே உச்சரிப்பில் பயிற்சி செய்தால் அமெரிக்க/பிரிட்டிஷ் உச்சரிப்பில் சிறந்த முன்னேற்றம் காணலாம்.

#4. கைப்பேசியில் ஆங்கிலம் தொடர்பான App - அகராதி, இலக்கணம், சொற்கள் எல்லாமே இருக்க மாதிரி வைத்திருப்பது உதவும்.

#English : ஆங்கிலம் எளிதானது தான் ஆனால் நமது தாய் மொழி அல்ல. அதனால் எழுத்து பிழைகள், உச்சரிப்பு கோளாறுகள் சகஜமானது. மனம் தளராமல் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top