#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா?
  • 10:23AM Aug 19,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:23AM Aug 19,2019 India

சுற்று சூழல் காரணிகள் மற்றும் மனித நடவடிக்கைகள் யானைகளின் வாழ்விடத்தை சிதைத்தது மட்டுமல்லாமல் அதன் சமூக நடத்தைகளையும் மாற்றியுள்ளது என பெங்களூரிலுள்ள மேம்பட்ட ஆய்வுகளுக்கான தேசிய மையம்(NIAS) தெரிவித்துள்ளது. முன்பு காட்டுப் பகுதியில் தனியாகவோ அல்லது இரண்டு பாலினங்களும் கலந்த எல்லா வயதுப் பிரிவுகளும் இருந்த குழுவாக ஆண் யானைகள் வசித்த வந்தன.மனிதன் நிலப் பகுதிகளை மாற்றியமைத்தபின் அங்கு ஆண் யானைகள் மட்டும் குழுவாக வசிப்பது அதிகரித்துள்ளது என அந்த ஆய்வில் தெரிகிறது.

பிப்ரவரி 2016இலிருந்து டிசம்பர் 2017 வரை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு காட்டுப் பகுதிகள், வயல்கள், மனிதர்கள்  வசிக்கும் பகுதிகள் ஆகியவை உள்ளடக்கிய 1௦௦௦௦ சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யானைகளின் நடமாட்டத்தை ஆய்வு செய்தார்கள். வயல்களுக்கு வரும் யானைகளையும் காடுகளிலேயே தங்கியிருக்கும் யானைகளையும் காமிராப் பொறிகளை வைத்து கண்காணித்தார்கள்.வயதுக்கு வந்த ஆண் யானைகள் தங்கள் இனப் பெருக்க வலிமையை அதிகரித்துக் கொள்ள கூட்டத்தைவிட்டு விலகி நல்ல உணவைத் தேடி போவது வழக்கம்.துணையைத் தேடுவதற்காகவும் இது நடக்கும்.ஆனால் வழக்கமாக அவை தனியாகத்தான் அலைந்து திரியும்.ஆனால் அண்மைக் காலங்களில் ஆண் யானைகள் குழுவாக தங்களை அமைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன.

அதிகரிக்கும் சாலைகள்,மின் கம்பிகள் போன்றவற்றால் மாறிவரும் அபாயகரமான சுற்று சூழல் காரணமாக அவை தனியாக இருப்பதை தவிர்த்து கூட்டமாக இருக்கத் தொடங்கியுள்ளன.இது அவைகளுக்கு பலவிதங்களில் உதவுகின்றது என்கிறார் நியாசை(NIAS) சேர்ந்த ஆய்வு மாணவர் நிஷாந்த் ஸிரீனிவாசையா  அந்த நிலப் பகுதியைப் பற்றி நன்கு அறிந்த யானைகள் சரியான வழியில் குழுவை நடத்தி செல்லவும் சத்தான உணவுகளைக் கண்டறியவும் மனிதர்கள் நிறைந்த பகுதிகளில் தப்பிக்கவும் உதவுகின்றன.அதிக உணவு ஆதாரங்கள் நிறைந்தததும் ஆனால் அதிக ஆபத்தானதுமான  பகுதிகளில் இளம் ஆண் யானைகளுக்கு இப்படி குழுவாக செல்வது ஒரு அவசியமான மாற்றமாக இருக்கிறது.

இதுபோல் ஆண்கள் மட்டுமே உள்ள குழுக்கள் பேபூன் குரங்குகள்,ஆசிய ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆகியவைகளிடமும் காணப்படுகின்றன..இது சேர்ந்து இருக்கும் பழக்கம் மற்றும் இனப்பெருக்கத்தில் மேலாதிக்கம் செலுத்துவது ஆகிய காரணங்களுக்காக உள்ள  ஏற்பாடு.ஆனால் யானைகளைப் பொறுத்தவரை இது ஆபத்துகளிலிருந்து தப்பிப்பதற்கான ஏற்பாடு.எனவே இவைகளை மேலும் ஆய்வு செய்வது மனித –யானை மோதல்களை சமாளிக்க புதிய உத்திகளை வரைவதற்கு உதவும். |  #FEEDINGANIMALS: கருணை காட்டுவதெல்லாம் சரி!!! என்ன செய்கிறோம் சிறிய உயிர்களுக்கும், இயற்கைக்கும்?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top