#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ? youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்!
  • 18:32PM May 22,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 18:32PM May 22,2019 India

இத்தனை வருடத்தில் இல்லாத அளவிற்கு இந்திய தேர்தல் முடிவை அறிந்து கொள்ள உலகில் பல நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதனை உறுதிபடுத்தும் வகையில் அமெரிக்காவில் முதன்முதலாக இந்திய தேர்தல் முடிவுகள் நேரலையில் ஒலிபரப்பப்பட உள்ளது. அதுபோக facebook நிறுவனம் கூட தேர்தல் முடிவு குறித்த தகவல்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் youtube வீடியோ பார்க்க வரும் மக்களையும் தேர்தல் முடிவை காண செய்யும் பொருட்டு Prasar Bharti நிறுவனம்  youtube உடன் இணைந்து lok sabha election resultயை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இதற்காக youtube நிறுவனத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை காணும் வழிமுறையை இனி அடுத்து காணலாம்.

#1. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் https://www.youtube.com என்ற இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்கு செல்லும் போது, இந்திய lok sabha election result live வசதி இருக்கும்.

#2. அதனை தேர்வு செய்து உள்ளே போகும் போது அது டி.டி. நியூஸ் youtube பக்கத்திற்குள் செல்லும், அதில் நேரடியாக வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்களை காண முடியும்.

#3. இதனை மற்ற 14 மொழிகளிலும் நேரடியாக பார்க்க முடியும்.

#4. இதன் மூலம் தேர்தல் முடிவு குறித்த வெவ்வேறு விவரங்களை டிஜிட்டல் முறையில் பல மொழிகளில் காண முடியும். https://www.youtube.com/user/DDNewsofficial

#5. youtube மற்றும் Prasar Bharti இணைந்து செயல்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

#Lok Sabha Election Result 2019: பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை மூலம் உலக அளவில் உற்றுநோக்கப்படும் தேர்தலாக இந்திய தேர்தல் உருவெடுத்துள்ளது. இதன் முடிவுகளை பொறுத்தே இந்தியாவுடன் போட்டியில் இருக்கும் நாடுகளின் எதிர்காலம் அமையும் என்பதால், நாளைய முடிவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

 

 

Share This Story

முருகானந்தம்

Top