தேர்தலை முன்னிட்டு ஒளிபரப்பை நிருத்த போகும் பிரபல தொலைக்காட்சி!
  • 13:12PM Apr 13,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 13:12PM Apr 13,2019 Kodambakkam

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இறுதி கட்ட பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது, பல்வேறு தலைவர்களும் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு சேகரித்த பிரபல கட்சிகள் தொலைக்காட்சிகளில் தேர்தல் விளம்பரங்களை வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

jlvote25e_2x.jpg

தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மக்களை 100 சதவீதம் வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் குறும்படங்களை வெளியிட்டது.

fba9b897fc17f88d5c03d4b45c48af16.jpg

இதனிடையே மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 18-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்ப மாட்டோம் என பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான “ஜீ தமிழ்” தொலைக்காட்சி அறிவித்துள்ளது. தொலைக்காட்சியின் ஒளிபரப்பை விட மிக முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது. அது இந்த மக்களவை தேர்தலில் வாக்களிப்பது' என்று ஜீ தமிழ் குறிப்பிட்டுள்ளது. ஜீ தமிழ் எடுத்திருக்கும் இந்த முடிவினை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

D3_ttMwUcAIWKqQ.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top