#ElanaMugdan ஒரு வருஷம் ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணாததுக்கு இந்தப் பொண்ணு எவ்வளோ ஜெயிக்கபோகுது தெரியுமா?
  • 18:25PM Oct 14,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:25PM Oct 14,2019 Chennai

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத ஒவ்வொரு நொடியும் நமக்கு இரு கைகளும் இல்லாதது போல உள்ளது. முன்பெல்லாம் வயசானவர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் வாக்கிங் சென்று பொழுதை கழிப்பார்கள், ஆனால் தற்போது நேராக TikTok போன்ற செயலிகளில் குத்தாட்டம் போட்டு பொழுதை கழிக்கிறார்கள். தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக உள்ளோம். ஒரு மணிநேரம் கூட ஸ்மார்ட் போன் இல்லாமல் நம்மால் இருக்கமுடியாது, ஆனால் 29 வயது பெண் ஒருவர் ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். இதற்காக அவருக்குப் பெரிய சன்மானமும் காத்திருக்கிறது!

#90skid: 90களின் குழந்தையாக நீங்கள் இந்த பொய்களை எல்லாம் நம்பியுள்ளீர்களா? இந்த லிஸ்டில் நீங்க நம்பிய பொய் என்ன??

CocaCola நிறுவனத்தின் கிளை நிறுவனமான Vitaminwater நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் Scroll Free for a Year Challenge என்ற போட்டியை அறிவித்தது. இந்தப் போட்டியில் பங்குகொள்பவர் அடுத்த 365 நாட்களுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தாமல் இருந்தால் அவருக்குப் பரிசு தொகையாக ஒரு லட்சம் டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் 72 லட்சமாகும். கலந்துகொள்ளும் நபர் Vitaminwater நிறுவனம் வழங்கும் சாதாரண மொபைலை மட்டும் தனது அவசர தேவைகளுக்காகக் கால் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அப்போது சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தனர்.

இதில் அனைவரையும் வடிகட்டி, இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக Elana Mugdan என்பவரை தேர்ந்தெடுத்தனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து Elana Mugdan ஸ்மார்ட் போனை பயன்படுத்தவில்லை. இதனை மாதங்களாக Vitaminwater நிறுவனம் வழங்கிய Kyocera flip phone மட்டுமே Elana Mugdan பயன்படுத்தி வருகிறார். இவருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படக்கூடாது என்பதற்காகக் கம்ப்யூட்டரை பயன்படுத்த அனுமதித்துள்ளனர். தொடர்ந்து 8 மாதங்கள் ஸ்மார்ட் போன் பயன்பாடில்லாமல் வாழ்ந்து வரும் Elana Mugdan தற்போது நிம்மதியாக, எந்தக் கவலையும் இன்றி வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top