#egg-shaped lumps: உவாவ்! இப்படி ஒரு காட்சியை பார்க்க நீங்க கொடுத்து வைக்கணும் - வரலாற்றில் அதிசயமாக நடந்த அற்புதம்!
  • 20:12PM May 10,2020 Finland
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 20:12PM May 10,2020 Finland

நோக்கியா கம்பெனி உருவான நாடான Finland நாட்டு கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான முட்டை வடிவிலான ஐஸ் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டாலும், அவ்வளவு எளிதில் இந்த உருவம் வந்து விடாது. இது சில குறிப்பிடத்தக்க கால நிலைமைகளில் மட்டுமே நடக்கின்ற நிகழ்வு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது காற்றின் வெப்ப நிலை ஜீரோ டிகிரிக்கு சற்று கீழே செல்ல வேண்டும். அதே நேரத்தில் நீரின் வெப்ப நிலை உறை நிலையில் இருக்க வேண்டும். அதே போல கடற்கரை சற்று சரிவான தளத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் இது போன்ற வடிவம் உருவாகும். கடற்கரை அமைப்பில் லேசான அலை ஏற்றமும் தேவைப்படும். இலையுதிர்காலம் மட்டுமே இதற்கு ஏற்றது. இந்தக் கட்டிகள் சுமார் முப்பது மீட்டர் தூரத்திற்கு பரவிக்கிடந்ததாகவும், அதில் பெரிய ஐஸ் கட்டி கால் பந்து அளவுக்கு பெரியதாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

Bizarre egg-shaped lumps of ice cover

#egg-shaped lumps: முதலில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த விளக்கம் தெளிவாக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. | Eco Tourism: அது என்ன சூழல் சுற்றுலா? இந்த சுற்றுலாவில் என்னவெல்லாம் செய்வார்கள்? தெரிந்துகொள்வோமா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top