Misc

#Drooling: நல்லா அசந்து தூங்கினா வாயில் எச்சி வடியுதா? சற்றும் யோசிக்காமல் உள்ளே வாங்க, சில இரகசியம் சொல்றேன்!

Oct 16 2020 12:20:11 PM

எனக்கு இப்படித்தாங்க. நல்லா அசந்து தூங்கினா, வாயில் அருவி வடியுது. கொட்டும் நீர்த்துளியில் நனைந்து, அடிக்கடி தலையணை உறை துவைக்க வேண்டி உள்ளது. எனக்கே கொஞ்சம் சங்கடமா தான் இருக்கு. இருந்தாலும் எப்படி, எச்சில் வடியுது என்று தான் தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன். தூங்குவதற்கு முன்னாடி ஒரு சக்தி வந்து, இன்னைக்கு எப்படி வருதுன்னு ஒரு கை பர்த்தரலாம் என்று நேராக படுத்து தூங்கினால், காலையில் பழைய படி, தலையணை ஈரம் பல்லைக்காட்டுகிறது.

sleep drooling mouth

தூங்கும் போது வாயில் எச்சில் வடிய நிறைய காரணம் இருக்காம். வாய், தொண்டை தசைகள் உறக்க நிலையில் சரியாக வேலை செய்யாமல் போவதால், எச்சிலை உள்ளிழுக்க முடிவதில்லை. ஆன்னு! வாயை பிளந்து கொண்டு வாயில் மூச்சுவிட ஆரம்பித்தால், அதிக எச்சில் சுரக்குமாம். மூக்கில் மூச்சு விடுவது தான் சிறந்தது என்பதோடு, வாயில் மூச்சுவிட்டால் குறட்டை சத்தம் அதிகம் வரும் என்று சொல்வார்கள். இரவு தூங்க செல்வதற்கு முன்பு செரிமானமாக உணவை சாப்பிட்டாலும் எச்சில் வடியும்.

sleep drooling mouth

நெஞ்சு எரிச்சல் உண்டாகி, அமலம் தொண்டை வரைக்கும் வருவது போன்ற உணர்வு உண்டாகும் போது, அதனை சமநிலைப்படுத்த வாயில் எச்சில் அதிகம் சுரக்கும். அதனால் தான் இரவில் கீரை போன்ற எளிதில் செரிமானமாகாத உணவை சாப்பிடக்கூடாது என்கின்றனர். எச்சில் வடிவது எல்லாம் பெரிய மேட்டரே இல்லை என்றாலும், தூக்க குறைபாடு உள்ளவர்களை பாடாய் படுத்திவிடும். 

sleep drooling mouth

ஓரளவுக்கு எச்சில் வடிவதை குறைக்க வேண்டும் என்றால், வாய் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன்னர், வாய் வறண்டது போன்ற உணர்வு இருந்தால், தாகம் தீர தண்ணீர் குடிக்க வேண்டும். உங்களுக்கு வசதியாக இருந்தால், படுக்கும் பொஷிசனை மாற்றிப்பார்க்கலாம். தூங்கும் போது, வாயில் பொருத்திக்கொள்ள, தனியாக சாதனங்கள் ஆன்லையில் கிடைக்கிறது. அந்த அளவுக்கு போகத்தேவையில்லை. எச்சில் வடிவது ரொம்பவுமே சங்கடமாக இருக்கிறது என்றால் மட்டும் அடுத்த நிலை பற்றி யோசிக்கலாம். 

sleep drooling mouth

இதே போல குழந்தைகளுக்கும் அதிகம் எச்சில் வடியும். பசியில்லாமல் உணவு ஊட்டிவிடப்படுவதால், குழந்தைகளுக்கு இது அதிகளவில் ஏற்படும். சில தாய்மார்கள், தம்முடைய குழந்தைகள் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக, பசியைக் கவனிக்காமல், நேரம் தவறாது சோறு ஊட்டிக் கொண்டிருப்பார்கள். அதனால் குழந்தைகளுக்கு சில நேரங்களில் அதிக அளவில், நுரையுடன் எச்சில் வாயிலிருந்து வெளியே தள்ளும். அதற்காக பயப்பட தேவையில்லை.