#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு?
  • 16:16PM Sep 21,2019 Pachaimalai Hills
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:16PM Sep 21,2019 Pachaimalai Hills

குளோபல் வார்மிங்கில் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அழியப்போகிறது என்று ஒரு பக்கம் இயற்கை நம்மை அச்சுறுத்தி வரும் வேளையிலே தனது 156 ஏக்கர் நிலத்தில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன், அதன் மூலம் ஆண்டுக்கு பத்து லட்சம் வரை வருமானத்தையும் ஈட்டி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் துரைசாமி. இவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சைமலை அடிவாரத்தில் காஞ்சேரி கிராமத்தில் உள்ள தனது 156 ஏக்கர் நிலத்தில் தற்போது மிகப்பெரிய சோலை வனத்தை உருவாக்கி, அதற்கு “லிட்டில் ஊட்டி” என்ற பெயரையும் சூட்டியுள்ளார்.

Millionaire to farmer

#Agroforestry: வாரந்தோறும் 2 நாட்கள் தனது வனத்துக்கு வந்து பணிகளை மேற்பார்வையிட்டுச் செல்வது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக டாக்டர் துரைசாமி கூறுகிறார். மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன், செலவை ஈடுகட்ட தேவையான மரங்களையும் வளர்த்து, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானத்தையும் பெற்று வருகிறார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top