#Self Testing: விருப்பமானவர் மீது நீங்கள் கொண்டுள்ளது காமமா? காதலா? சுயப்பரிசோதனைக்கு நீங்கள் தயாரா?
  • 11:11AM Aug 19,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:11AM Aug 19,2019 Kodambakkam

பெரும்பாலான இளைஞர்கள் மற்றவர் மீது ஏற்படும் காமத்தைக் காதல் என்றே எடுத்துக்கொள்கின்றனர். தங்களையும் அறியாமல் காமத்திற்காக மட்டுமே நெருங்கி பழகுகின்றனர். அவர்களுக்குள் இருக்கும் ஆசையைக் காதல் என்று எடுத்துக்கொண்டு பழகுகின்றனர். எப்போது இவருக்குள்ளே காமம் நிகழ்கின்றதோ அப்போதே அந்த உறவில் மீதான ஆர்வம் குறைய ஆரம்பிக்கின்றது. உண்மையான காதல் காமத்தையும் கடந்து செல்லக்கூடியது. வாழ்க்கையின் ஒரு அங்கமே கமாம், அதே போல வாழ்க்கையின் இறுதி வரை நீள்வதே காதல்.

4.jpg

ஒரு உறவில் காதலுக்கும் காமத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள முதலில் இந்த இரண்டிற்கும் உள்ள அர்த்தத்தைத் தெளிவாக தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். காதல் என்பது அன்பைப்போல இரண்டு நபர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு உணர்வாகும். ஒருவர் மற்றவரை முற்றிலுமாகப் புரிந்து கொள்வதனால் ஏற்படுவது. இந்த காதல் என்பது புரிந்து கொண்டவர் மீது நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்தும். இருவருக்குள் மிகப்பெரிய சண்டை வந்தாலும் கூட அந்த தாக்கம் இருவருக்குமான உறவை வலுப்படுத்தும்.

5.jpg

உங்களது துணை உங்கள் தோற்றத்தின் மீது மட்டும் குறியாக இருந்து உங்கள் உள்ளத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் உங்கள் உறவானது சுத்தமான காமத்தினால் ஆனவை. இருவருக்குள்ளும் சரியான அல்லது நேர்மையான உரையாடல்கள் இல்லாமல், நேரடியாக நெருக்கத்தில் ஈடுபட்டால் அது உண்மையாகக் காதலாகாது. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் ஒருவகையான பகல் கனவில் வாழ்ந்துவந்தாள் உங்களது உறவில் காமம் மட்டுமே உள்ளது என்று அர்த்தம்.

7.jpg

உங்கள் உறவில் இருப்பது காதலா? காமமா? நீங்கள் நிஜமாகவே காதலிக்கின்றீர்களா? அல்லது வெறும் இச்சைக்காக நெருங்கிப் பழகி வருகின்றீர்களா? என்ற கேள்விகள் எப்போது எழுகின்றன? திருமணம் என்ற பந்தத்திற்குள் அடங்காமல் நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்தாள் அந்த உறவில் காமம் பிரதான பங்கினை வகிக்கும். காமத்திற்காக இருவரும் சில முக்கியமான விஷயங்களை விவாதிக்காமல் கடந்து செல்லும் பொழுது உங்கள் அன்பானது காதலைத் தாண்டி காமமாக மாறுகின்றது.

screencapture-images-desimartini-media-main-user-uploads-2016-10-e8a225fb-c6e1-456b-a597-a0e4c1845f37-jpg-2019-08-19-08_32_01.png

இதே நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது நேரம் போவதே தெரியாமல் ஆகிவிடுகின்றதா? அது நிச்சயமாகக் காமம் அல்ல. இந்த நேரத்தில் ஒருவரது பிரச்சனையை மற்றவர் உண்மையாகக் காது கொடுத்துக் கேட்க முடியும், பிரச்சனைக்குரிய காரணத்தையும், பிரச்னையை சரி செய்வதற்கான வழியையும் சுலபமாகச் சொல்ல முடியும். உங்கள் வாழ் நாள் முழுவதும் இந்த உறவு நீடிக்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் வந்தால் அது காதலே ஆகும். அந்த உறவில் காமத்திற்குக் குறைவான இடமே கொடுக்கப்படும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top