#Tourism: சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் உலகில் உள்ள நான்கு முக்கியமான நகரங்கள்!!!
  • 23:04PM Feb 07,2020 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 23:04PM Feb 07,2020 Kodambakkam

உலகம் பிறந்தது எனக்காக! ஓடும் நதிகளும் எனக்காக!! என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல உலகம் எங்கும் சுற்றித் திரிய எண்ணம் கொண்ட சுற்றுலாப் பிரியரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. நவீனமயமாகிப் போன இந்த காலக்கட்டத்தில் உட்கார்ந்த இடத்தில் இருந்துக் கொண்டே நமது ரசனைக்கு ஏற்ப பல சுற்றுலாத் தளங்களை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் அவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் இடங்கள் பாதுகாப்பானது தானா என்பது கேள்விக் குறியானது தான். அப்படி இந்த உலகில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நான்கு சுற்றுலாத் தளங்கள் என்னென்ன என்பது பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.   

2a.jpg

Cairo, Egypt. எகிப்து நாடானது புராணங்களின் மையம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எகிப்து நாட்டின் பண்டைய நாகரீகங்கள் பற்றி நாம் படித்தும், திரைப்படங்களில் பார்த்தும் தெரிந்து வைத்திருப்போம். அப்படியான எகிப்தின் தலைநகரம் தான் இந்த கெய்ரோ. இருபத்து நான்கு மணி நேரமும் பரபரப்பாக இருக்கும், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் நகரம் தான் கெய்ரோ. சுமார் ஒன்பது மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரமான இது தற்பொழுது சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்ன என்று பார்த்தால் இங்கே தங்கும் விடுதிகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தான்.

2b.jpg

Pattaya, Thailand. மதுப்பிரியர்களின் சொர்க்கம் என்று உலக நாடுகளால் அழைக்கப்படும் இடம் தான் தாய்லாந்தில் இருக்கும் பட்டாயா. இங்கே திரும்பும் இடமெல்லாம் மதுபானக் கடைகளும், பப்புகளும் தான் இருக்கிறது. ஆனால் இங்கே சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்துவது மது பானங்களோ, அளவிற்கு அதிகமாக மது அருந்தும் மனிதர்களாலோ அல்ல. இங்கே கடைகளில் வழங்கப்படும் உணவுகளால் தான். காரணம் இங்கே இருக்கும் கடைகளில் இறைச்சி வகை உணவுகளை சாப்பிடும் நூற்றில் ஐம்பது சதவிகித பேர்களுக்கு ஃபுட் பாய்சனிங் என்று சொல்லப்படும் உடல் உபாதை கோளாறு வந்துவிடுகிறதாம்.

2c.jpg

Dubai, UAE. துபாய் நாடானது கடுமையான சட்டத் திட்டங்களால் பின்னப்பட்டுள்ளது என்பது உலகம் அறிந்த ஒன்று தான். முக்கியமாக பெண்கள் அணியும் உடைகளானது பவ வரைமுறைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இந்த சட்டம் அந்த நாட்டுப் பெண்களுக்கு மட்டும் அல்ல துபாயை சுற்றிப்பார்க்க வரும் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கும் தானாம். அதே போல ஆண்கள் பெண்களை முறைத்து பார்த்தாலோ, அல்லது அவர்களை எரிச்சலடையச் செய்வதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறதாம்.

2d.jpg

Mumbai, India. சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். வர்த்தகம் தொடங்கி சினிமா வரை அனைத்திற்கும் புகழ் பெற்றது நம் மும்பை மாநகரம். இங்கே சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் நெருக்கடியாக இருப்பது பிச்சைக் காரர்களும், ஏமாற்றி பணம் பரிப்பவர்களும் தான் என்கிறது ஒரு சர்வே. தற்பொழுது பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநகரமாகவும் மும்பை உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top