#DSSSB: 10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும் - தீயணைப்பு துறையில் 706 காலிப்பணியிடங்கள் : அரிதான வாய்ப்பு!
  • 11:50AM Oct 11,2019 Delhi
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:50AM Oct 11,2019 Delhi

DSSSB எனப்படும் டெல்லி மாநில அரசின் தீயணைப்பு துறையில் Fire Operator பணிக்கான 706 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

your image

#1. Fire Operator என்ற பணிக்கு 706 காலியிடங்கள் உருவாகியுள்ளது. இதற்கான சம்பள விகிதம் ரூ.5,200 முதல் 20,200 வரை இருக்கும்.

#2. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

#3. உயரம் குறைந்தது 165 செ.மீ இருக்க வேண்டும். எடை குறைந்தபட்சம் 50 கிலோ இருக்க வேண்டும்.  மார்பளவு சுருங்கிய நிலையில் 81 செ.மீ. விரிவடைந்த நிலையில் 86.5 செ.மீ இருக்க வேண்டும்.

#4. உடல் தகுதிக்கு நீளம் தாண்ட வேண்டும். உயரம் தாண்ட வேண்டும். 200 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை ஓடி கடக்க வேண்டும்.

#5. அடுத்து ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண், உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

#6. எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். ரூ.100 விண்ணப்ப கட்டணமாக  ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

#7. www.dsssbonline.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கடைசி தேதியாக 6.11.2019 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#DSSSB: நேரடியாக விண்ணப்பிக்க வேண்டிய பக்கத்துக்கு செல்ல https://dsssbonline.nic.in/Registration.aspx என்ற இணையதள முகவரியை அணுகவும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top