ஒரே வருடத்தில் 800 % அதிக வருவாய் ஈட்டிய திமுக..! வருவாய் குறைந்த வருத்தத்தில் அதிமுக
  • 16:34PM Mar 09,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 16:34PM Mar 09,2019 Chennai

இந்திய அரசியல் சாசனத்தைப் பொறுத்தவரை ஒரு கட்சி முறையாக அங்கீகரிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசாங்கத்தால் பல சலுகைகள் வழங்கப்படும்.இந்த சலுகைகளுள் அணைத்து கட்சிகளின் கவனத்தைப் பெறுவது வருமான வரி விலக்கு தான்.இந்த வரி விளக்கு பெறுவதற்காக ஒவ்வொரு கட்சியும் ஆண்டுதொடரும் தேர்தல் ஆணையத்திடம் வருமான கணக்கை தாக்கல் செய்வார்கள்.

Image result for DMK
காட்டப்படும் வருமானத்திற்கான தெளிவான விவரங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.கொடுக்கப்பட்ட கட்சிகளின் விவரங்களை நன்கு விசாரித்து, பின் தேர்தல் ஆணையம் வரி விலக்கு அளிக்கப் பரிந்துரைக்கும்.இந்நிலையில் 2017-2018 ஆண்டிற்கான வருவாய் கணக்கை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 37 கட்சிகளும் தாக்கல் செய்தனர்.

Image result for dmk membership card
தாக்கல் செய்யப்பட்ட தகவலின் படி திமுக 35.748 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.இந்த தொகை கடந்த ஆண்டின் வருவாயை விட 800% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டுத் திமுகவின் வருவாய் வெறும் 3 கோடி தான் கணக்கில் காட்டியுள்ளது.இந்த வருவாய்க்கான முக்கியக் காரணம் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்து,உறுப்பினர் அட்டை வழங்குவதற்குப் பெறப்பட்ட தொகை,ஏற்கனவே இருந்த உறுப்பினர்களின் நிலுவைத்தொகை மற்றும் கட்சியின் பெயரில் வங்கியில் உள்ள பணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Image result for AIADMK,PMK,DMDK
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிமுகவின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது.இந்த ஆண்டின் அதிமுகவின் வருவாய் 12.726 கோடி ரூபாய்.இவற்றைத் தொடர்ந்து பிற கட்சிகளான பாமக 1.173 கோடி ரூபாயும்,தேமுதிகவின் வருவாய் 87.8 லட்சம் ரூபாய் என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.இந்த பட்டியலின் படி அதிக வருவாய் ஈட்டிய மாநில கட்சிகளின் வரிசையில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி முதலிடத்திலும்,திமுக இரண்டாவது இடத்திலும் உள்ளது.

Share This Story

Top