நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து 21 தொகுதி இடைதேர்தலுக்கும் தயாராகும் திமுக
  • 12:41PM Mar 09,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:41PM Mar 09,2019 Chennai

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்துத் தமிழகத்தில் காலியாக இருக்கும் 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.இந்நிலையில் காலியாக இருக்கும் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர்க்கான விருப்பமனுக்கள் கடந்த 1 ஆம் தேதி வழங்கப்பட்டது.

Image result for anna arivalayam
இன்று இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனுவை வாங்கியவர்களுக்கான நேர்காணல் தற்போது அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது. இவர்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக விருப்பமனுவை பெற்றவர்களுக்கு நாளை மறுநாள் நேர்காணல் நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.

Image result for stalin DMk
இன்று நடக்கும் நேர்காணலிலேயே மொத்த தொகுதிக்கானவர்களையும் சந்திக்கக் கட்சி தலைமையகம் முடிவுசெய்துள்ளது.எப்படியும் அடுத்த வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்திடும் என்பதால் இப்பொழுதே எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை முடிவு செய்யும் பணியில் ஈடுபாடு வருகின்றனர்.

Top