அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதி : தொகுதிகள் ஒதுக்கீடு விபரம் வெளியானது.!
  • 21:08PM Mar 09,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:08PM Mar 09,2019 Tamil Nadu

your image

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுப்படுத்த முயற்சி நடைபெறுவதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியதில் உண்மை உள்ளது, அதற்காக பலர் முயற்சித்து வருகின்றனர். தேமுதிக எங்களோடு கூட்டணியில் வரும் என்று இன்னமும் நம்பிக்கை இருக்கிறது  என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சில மணி நேரங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிமுகவில் கூட்டணி கதவுகள் அடைக்கப்பட மாட்டாது, வருபவர்களுக்கு மரியாதை செய்வோம் என்றும், யாருடைய தயவிலும் அதிமுக ஆட்சி இல்லை, தங்களால் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிரேமலதா விஜயகாந்த் ஓரிரு தினங்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில், இன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Share This Story

முருகானந்தம்

Top