#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்?
  • 11:55AM Sep 21,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:55AM Sep 21,2019 Kodambakkam

இந்தியாவின் இரு பிரம்மாண்ட திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி கொடுத்துவிட்டு சர்வ சாதாரணமாக தனது அடுத்த கனவை நோக்கி பயணம் செய்துகொண்டு இருக்கின்றார் தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் திரு.எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்கள். தெலுங்கு திரையுலகில் இந்த இரண்டு முன்னணி நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பது சாதாரணமான காரியம் அல்ல, அது ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்குவதற்கு சமம். நடிகர் அஜித்தையும் நடிகர் விஜய் அவர்களையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது எப்படியோ அப்படிதான் தெலுங்கில் நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது. இந்த இமாலய துருவங்களை ஒரே படத்தில் இணைக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் திரைக்கதை எவ்வளவு ஆழமாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் இருந்திருக்க வேண்டும்.

4.jpg

ஆனால் எப்போதும் தனக்கென ஒரு தனி வலியை உருவாக்கி அதில் வெற்றிகரமாக பயணிக்கும் ராஜமௌலி buster keaton-னை தொழுது தழுவியது ஏன்?. முதலில் யார் அந்த buster keaton என்று கேட்கின்றீர்களா? சொல்லுகின்றேன். உலக சினிமாவின் தொடக்கம் அது, சார்லி சாப்ளினுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உருவாகிக்கொண்டு இருந்த காலம். அந்த காலத்திலேயே அவருக்கு சக போட்டியாளராக ஹாலிவுட்டில் களம் இறங்கியவர் தான் இந்த buster keaton. சார்லியைப் போல ஸ்லாப்ஸ்டிக் காமெடியில் முத்திரைப் பதித்தவரும் கூட. நடிகர் buster keaton நடித்து, இயக்கி தயாரித்த வெற்றிப்படங்களில் ஒன்று தான் “Our Hospitality”. இந்த படம் 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது. சார்லி சாப்ளின் படங்களைப் போல இந்த படத்திலும் வசனங்கள் கிடையாது, வெறும் அசைவுகள் தான். ஆனால் இந்த படம் செய்த சாதனை சொல்லில் அடங்காதது என்று தான் சொல்ல வேண்டும்.

6-vert.jpg

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலியிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஒரு தக்க பதிலை “மரியாதா ராமண்ணா” என்ற படத்தின் மூலம் கொடுத்தார். அந்த கேள்வி இதுதான், “பெரிய ஹீரோக்களை வைத்து ஹிட் கொடுப்பது பெரிதல்ல, ஒரு சுமாரான முகத்தை வைத்து உங்களால் ஹிட் கொடுக்க முடியுமா?” இந்த கேள்வி ராஜமௌலியை மிகவும் பாதித்தது. அந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை, ஆனால் அவரது படத்தின் மூலம் தக்க பதிலை கொடுத்தார். இந்த “மரியாதா ராமண்ணா” படத்தில் பிரபல தெலுங்கு காமெடியன் தான் ஹீரோ. ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது buster keaton-னின் “Our Hospitality” படத்தின் ரீமேக் தான். பின்னர் இத்திரைப்படம் பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சரியாக 2011 ஆம் ஆண்டு “மரியாதே ராமண்ணா” (கன்னடம்), அதே வருடம் பெங்காலியில் “Faande Poriya Boga Kaande Re”, 2012 ஆம் ஆண்டு ஹிந்தியில் “Son of Sardar”, மற்றும்
2014 ஆம் ஆண்டு தமிழில் சந்தானம் நடிப்பில் “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்று பலதடவை ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top