#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...
  • 18:08PM May 23,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:08PM May 23,2019 Chennai

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் போபால் தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிட்ட பிரக்யா முன்னிலையில் இருப்பதைக் கேட்ட அதிர்ச்சியில் எண்ணிக்கை மையத்திலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார்.

Image result for pragya thakur

போபால் தொகுதியில் போட்டியிட்ட பிரக்யா தாக்கூரை எதிரித்துக் காங்கிரஸ் சார்பாகத் திக்விஜய் சிங் போட்டியிட்டிருந்தார்.எப்படியும் காங்கிரஸ் வென்று விடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர்களுக்குப் பிரக்யா முன்னிலையில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

congress leader passed away at counting station

இந்நிலையில் அக்கட்சியின் மாவட்ட தலைவரும் காங்கிரஸின் மூத்த உறுப்பினரான ரத்தன் சிங் தாகுர் போபால் வாக்கு நிலவரம் குறித்து விசாரிக்க வாக்கு எணிக்கை மையத்திற்கு வந்துள்ளார்.அப்பொழுது பிரக்யா முன்னிலையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து சரிந்து விழுந்துள்ளார்.மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரத்தன் சிங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top